India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50,000.. 5,000.. 200.. "தலை"க்கு வந்த தலைவலி.. கசிந்த ரகசியம்.. பறந்த ரிப்போர்ட்.. வெளுக்கும் தாமரை

Google Oneindia Tamil News

சென்னை: எவ்வளவுதான் திமுகவுக்கு குடைச்சல் தந்து கொண்டிருந்தாலும், பாஜகவுக்குள்ளும் சில சலசலப்புகள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறதாம்.. அப்படித்தான் தகவல்கள் கூறுகின்றன.

தமிழக பாஜகவை பொறுத்தவரை, தனித்து போட்டியிட்ட வரலாறு கிடையாது.. திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

5 டாகுமெண்ட்.. அவமதிப்பு.. சூழ்ச்சி - எடப்பாடிக்கு எதிராக பக்காவாக காய்நகர்த்திய ஓபிஎஸ்.. என்னாகும்? 5 டாகுமெண்ட்.. அவமதிப்பு.. சூழ்ச்சி - எடப்பாடிக்கு எதிராக பக்காவாக காய்நகர்த்திய ஓபிஎஸ்.. என்னாகும்?

ஆனால், அந்த பலவீனத்தை வெளிக்காட்டிக் கொள்வதும் இல்லை.. அதேசமயம், தனித்து நின்றால் 70 இடங்களில் ஜெயிப்போம், கோட்டையில் காவி கொடியை பறக்க விடுவோம் என்றெல்லாம் பெருத்த நம்பிக்கையுடன் சொல்வார்கள்.

 திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகள்

"திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது" என்று மூத்த தலைவர் எச்.ராஜா, ஒருமுறை சொல்லி இருந்தார்.. ஆனால், அதிமுக இல்லாமல் இதுவரை தேர்தலை சந்திக்க முடியவில்லை.. நகராட்சி தேர்தலை போல, வரப்போகும் எம்பி தேர்தலை அக்கட்சியால் எதிர்கொள்ள முடியுமா என்றும் தெரியவில்லை.. அதேசமயம், தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது..

 பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் மத்திய அமைச்சர் எல்.முருகன் என்பதையும் மறுக்க முடியாது.. அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு, இந்த வளர்ச்சியின் வேகம் கூடியுள்ளது.. பாஜக முன்னேற்றத்தை மட்டுமே பிரதானப்படுத்தாமல், பலமான கட்சியுடன் மோதும் சூட்சுமத்தை கொண்டுவந்தார் அண்ணாமலை... திமுக போன்ற ஆளும் கட்சியுடன் மோதினால், தங்கள் கட்சியும் வலிமை மிகுந்த கட்சியாக மக்களால் கருதப்படும் என்ற எண்ணமே இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.

 சலசலப்புகள்

சலசலப்புகள்

அதற்கேற்றபடி அதிமுகவுக்கு தங்கள் பிரச்சனையை சமாளிக்கவே நேரம் போதவில்லை என்பதால், இதை பாஜகவும் சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறது.. கட்சியும் வளர ஆரம்பித்துவிட்டது.. அதேசமயம், உட்பூசலையும், அதிருப்திகளையும் எந்த கட்சிகளாலும் தவிர்க்க முடிவதில்லை.. பாஜகவும் இதற்கு விதிவிலக்கல்ல.. நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில்கூட, சில சலசலப்புகள் எழுந்துள்ளன.

 50 ஆயிரமா?

50 ஆயிரமா?

சென்னையில் நேற்று முன்தினம், மோடி ஆட்சியின் 8 வருட சாதனையை விளக்கி, பிரம்மாண்டமான கூட்டம் நடத்தப்பட்டது.. இந்த கூட்டத்தில், 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாம்.. ஆனால், கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர்கள்தான் நிரம்பியிருந்தார்களாம்.. அண்ணாமலை பேசும்போது, காணப்பட்ட இந்த 5 ஆயிரம் பேர்களும், மத்திய அமைச்சர் முருகன் பேசும்போது குறைந்துவிட்டனராம்.. அதாவது வெறும் 200 பேர் மட்டுமே கூட்டத்தில் இருந்தார்களாம்..

  ஓபிஎஸ் குறித்த கார்த்திக் சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு பதிலளித்த ஹெச் ராஜா - வீடியோ
   மேலிடம்

  மேலிடம்

  இதெல்லாம் உண்மையா? அல்லது கட்சிக்குள்ளேயே சிலர் கிளப்பிவிடும் தகவலா என்று தெரியவில்லை.. அதுமட்டுமல்ல, இந்த கூட்டத்திற்கு சிலர் பணம் வசூல் செய்ததாகவும், பாஜக நிர்வாகிகள் மத்தியில் புகைச்சல் கிளம்பி உள்ளது. இதுகுறித்து டெல்லிக்கும் புகார் பறந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தை பாஜகதான் விரைவில் ஆளப்போகிறது என்று அந்த கட்சி தலைவர்கள் சொல்லிவரும் நிலையில், சலசலப்புகளும், முணுமுணுப்புகளும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது..!

  English summary
  Was L. Murugan insulted and What happened at the Chennai bjp meeting தமிழக பாஜகவில் உட்கட்சி பூசலும், முணுமுணுப்புகளும் எழுந்துள்ளதாம்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X