அது லுங்கி இல்லை தெரியுமா..? லுங்கி என்றால் கேவலமா? டி.எம்.கிருஷ்ணா வேதனை
சென்னை: கர்நாடக சங்கீத சபாவில் கச்சேரியின் போது டி.எம்.கிருஷ்ணா, லுங்கி உடையை உடுத்தி வந்து பாடினார் எனப் பலரும் பேசி வந்த நிலையில், அது லுங்கியே கிடையாது என்று கிருஷ்ணா புதிய விளக்கம் அளித்துள்ளார்.
உலக அரங்கில் தமிழையும் அதன் பண்பாட்டையும் கொண்டுபோய் சேர்த்துவருபவர் டேவிட் ஷுல்மன்தான் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த சங்கீத கலாநிதி விருதை வழங்கினார். அப்போது அவர் லுங்கி கட்டிக் கொண்டு இருந்த புகைப்படம் சமுக ஊடகங்களில் அதிக அளவு பகிரப்பட்டது. அது குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்றன.

அதற்கு முன்பாகவே எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி உறவினர் அவரது பெயரில் இந்த விருதை கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றம் வரை சென்றனர். சில ஆண்டுகள் முன்னதாக கிருஷ்ணாவைச் சபாவில் பாடக்கூடாது என்று விலக்கி வைத்த சம்பங்களும் நடந்தது. இவ்வளவு களேபரங்களுக்கு இடையில், சங்கீத சபா வழங்கிய விருது விழாவில் பங்கேற்று கச்சேரி செய்த கிருஷ்ணா லுங்கி கட்டிக் கொண்டு வந்ததுடன், 'சுதந்திரம் வேண்டும்' என்ற பாடலைப் பாடினார்.
நூற்றாண்டு காலம் பாரம்பரியம் கொண்ட கர்நாடக சங்கீத சபா நிகழ்ச்சியைக் காணக் கூட பாரம்பரிய உடையுடன் தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கேண்டீன் பக்கம் கூட ஒருவர் லுங்கியுடன் எளிதாக நுழைந்துவிட முடியாது. அப்படியான ஒரு கட்டுப்பாட்டு நிறைந்த அமைப்பின் அரங்கிற்குள் ஒருவர் லுங்கிக் கட்டி கச்சேரியே நடத்தியது வரலாற்று மாற்றம்தான்.

கிருஷ்ணாவுக்கு தனது கையால் இந்தப் பரிசை வழங்கிய டேவிட் ஷுல்மன் கிட்டத்தட்ட 10 மொழிகள் அறிந்தவர் என்பதுடன் பாலஸ்தீன போருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவர் கையால் விருதைப் பெற்றது பெரிய பெருமை என்கிறார் டி.எம். கிருஷ்ணா.
தான் பிறந்து வளர்ந்த ஒரு சமூகத்திற்கு எதிராகத் தான் கேள்வி எழுப்புவதால் பல நெருக்கடிகள் வந்துள்ளன என்றும் அப்படி வருவதைத் தெரிந்தேதான் இதைச் சுயவிமர்சனமாக மேற்கொள்கிறேன் என்றும் கூறியுள்ள கிருஷ்ணா, தான் ஒரு மேல்தட்டில் பிறந்தவன் தான் என்பதை மறுப்பதற்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.

சுதந்தரம் பெற்ற இந்தியாவில் கிருஷ்ணா அந்தக் கருத்தை வலியுறுத்து மீண்டும் கேட்டிருப்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் நாம் சுதந்தரமாக இல்லையா? என்ற கேள்வி அடுத்து வருகிறது. அது பற்றி விளக்கம் அளித்துள்ள கிருஷ்ணா, "இந்தியா சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆக பிறகும் நாம் சுதந்திரம் பற்றி பேசும் நிலையில்தான் இருக்கிறோம். எதை ஒன்றையும் அச்சம் இல்லாமல் பேசலாம் என்ற நிலை வரும் காலம்தான் உண்மையான சுதந்தரம் கிடைத்த நாள். அது இன்னும் வரவில்லை.
என்ன சொல்ல வேண்டுமோ அதைப் பேசுவது சுதந்திரம் என்றால், நான் என்ன உடை போட்டுக் கொள்ள விரும்புகிறேனோ அதைச் செய்வதும் சுதந்திரம் தானே? அடுத்து நான் கட்டி வந்த உடை என்ன என்பது யாருக்குமே தெரியவில்லை. அது லுங்கி கிடையாது? அதற்குப் பெயர் சரோங். இதை இலங்கையில் உள்ளவர்கள் கட்டும் உடை. இந்தோனேசியா மக்கள் உடுத்தும் உடை அது. சரோங் என்றால் சாரம் என்று அர்த்தம். தமிழ் வார்த்தையான சாரம் என்பதிலிருந்து உருவானதுதான் சரோங். அது லுங்கி கிடையாது.
அதை யாழ்ப்பாணத்தில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் செய்து வருகிறார்கள். அந்த நாட்டுத் தமிழர்கள் அதிகம் உடுத்து உடை அது. அந்தத் தமிழர்களை வாழவைப்பதற்காக அதை உடுத்துகிறேன்.
லுங்கி மட்டும் கட்டக்கூடாதா? அது என்ன தாழ்த்தப்பட்ட, உழைப்பாளிகள் மட்டும் உடுத்து உடையா? அதை நான் அணிந்தால் என்ன தவறு? அது என் அசிங்கமான உடையா? அப்படி என்றால் அந்த மக்கள் யார்? அவர்களைப் பற்றி இவர்களின் மனநிலை என்ன? இஸ்லாமியர் கட்டும் உடை என்றால் கவுரவ குறைச்சலா? அவர்கள் உடைகள் கவுரவம் கிடையாதா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்? அப்படி எனில் பைஜாமா, சல்வார் கமீஸ் ஏன் போடுகிறார்கள்? அதை போடாதீர்கள்? " என்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications