சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைநகரில் தண்ணீர் சரியில்லை... ஆயிரக்கணக்கில் குடிநீர் கேன்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

சென்னை: குடிநீரால் ஏராளமான பிரச்சனைகள் எழும் நிலையில், சென்னையில் சுகாதாரமற்ற ஆயிரக்கணக்கான குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வந்த புகாரைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரமற்ற முறையில் குடிநீர் உற்பத்தி செய்த 53 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒரே நேரத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். இதனால், குடிநீர் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வெள்ளைச் சிறகு விரித்து.. வண்ண வண்ணப் பூக்களாய்.. வானில் விரிந்து பறந்து.. ஊசுட்டேரிக்கு போலாமா?வெள்ளைச் சிறகு விரித்து.. வண்ண வண்ணப் பூக்களாய்.. வானில் விரிந்து பறந்து.. ஊசுட்டேரிக்கு போலாமா?

சோகத்திலும் சோகம்

சோகத்திலும் சோகம்

குடிநீர் பிரச்சனை ஒரு புறம் வாட்டி வருகிறது என்றால், சுகாதாரமற்ற குடிநீரை விற்று மற்றொரு பக்கம் பணம் பார்த்து வருகின்றனர் சிலர். கேன்களில் பல நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரால், உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகாதாரமற்ற குடிநீர் கிட்னி வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. காசு கொடுத்து வாங்கும் தண்ணீர், உயிரை குடிக்கும் நிலையில் இருப்பது சோகத்திலும், சோகம்.

5,000 குடிநீர் கேன்கள்

5,000 குடிநீர் கேன்கள்

சென்னையில் கோயம்பேடு, கொளத்தூர் மற்றும் வேளச்சேரியில் கேன் குடிநீர் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. காலையில் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே தரமற்ற 500 வாட்டர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, மாநகராட்சி முழுவதும் 5,000 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை

தண்ணீர் பற்றாக்குறை

மழை குறைவாக பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் சுத்தமாக வற்றிவிட்டது. தலைநகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. மெட்ரோ வாட்டர் பற்றாக்குறையால் 2 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டிருந்த தண்ணீர் இப்போது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் விநியோகிக்கப்படுகிறது.

சுகாதாரத்துறை நடவடிக்கை

சுகாதாரத்துறை நடவடிக்கை

இதானல், குடும்ப பட்ஜெட்டில் , மினரல் வாட்டர் கேன்களுக்கு என பணம் ஒதுக்கப்பட வேண்டி உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை பயன்படுத்திக் கொண்ட, சில தனியார் வாட்டர் நிறுவனங்கள் சுகாதாரமற்ற தண்ணீரையும், போலியான குடிநீரையும் விநியோகிப்பாதாக தகவல் வந்ததை அடுத்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கல்குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுத்துவரப்பட்டு, நீரை சுத்திகரிக்காமல் ஆயிரக்கணக்கில் வருமானம் பார்க்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இடைக்கால தடை

இடைக்கால தடை

இதற்கிடையே, விருதுநகர் மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி செயல்படும் 21 மினரல் வாட்டர் நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் அழகாபுரியை சேர்ந்த, விடியல் வீரபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

English summary
Thousands of drinking water cans seized in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X