சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலையடிக்கும் புழல் ஏரி...சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பே இல்லை

புழல் ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பேயில்லை என்று மகிழ்ச்சியடைகின்றனர் சென்னைவாசிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி தற்போது கடல்போல காட்சியளிக்கிறது. இந்த வீடியோக்கள் இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது ஏரியில் 2534 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

கடந்த 2018 ஆண்டு பருவ மழை பொய்த்ததால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. கல் குவாரி நீர் மற்றும் விவசாய கிணற்று தண்ணீரை கொண்டு நிலைமை சமாளிக்கப்பட்டது. கடந்த ஆண்டும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் குடிநீர் வழங்கும் பூண்டி உள்பட 4 ஏரிகளும் பாதி அளவே நிரம்பின. மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Water level of Puzhal Lake visual goes viral

தற்போது நல்ல மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. தற்போது ஏரியில் 2534 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 80 சதவீதம் நிரம்பி இருக்கிறது.

புதிய கல்வி கொள்கை- எம்.பில் படிப்பு இனி கிடையாது- மும்மொழிக் கொள்கை அமல்- மத்திய அரசுபுதிய கல்வி கொள்கை- எம்.பில் படிப்பு இனி கிடையாது- மும்மொழிக் கொள்கை அமல்- மத்திய அரசு

கடந்த ஆண்டு இதே மாதத்தில் புழல் ஏரி வறண்டு காணப்பட்டது. இந்த ஆண்டு புழல் ஏரியில் முழுக்க நீர் நிரம்பியுள்ள நிலையில் வீசும் காற்றில் ஏரியில் கடல் போல அலைகள் எழும்பி தரையில் மோதும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

Water level of Puzhal Lake visual goes viral

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. தென்மேற்கு பருவமழையும் சரியான அளவில் பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழையும் சரியான நேரத்தில் துவங்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. எனவே இந்த ஆண்டு சென்னைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே தண்ணீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
Puzhal Lake, the source of drinking water in Chennai, now looks like the sea. These videos are now going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X