சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை.. அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை!

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்ணீர் பிரச்னை... அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை!

    சென்னை: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடிகர் ரஜினிகாந்த் அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    தண்ணீர் பிரச்சனையை தவிர்க்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தவிர்க்க நடிகர் ரஜினிகாந்த் யோசனை கூறியுள்ளார்.

    ரசிகர்களுக்கு பாராட்டு

    ரசிகர்களுக்கு பாராட்டு

    சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, குடிநீர் பிரச்சினையில் தவிக்கும் மக்களுக்கு தண்ணீர் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ரசிகர்களை மனமார்ந்து பாராட்டுகிறேன். ரசிகர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

    தெரிய தொடங்கியிருக்கிறது

    தெரிய தொடங்கியிருக்கிறது

    ரசிகர்கள் செய்வது மிகவும் நல்ல விஷயம். இதுபோன்ற நல்ல வேலைகளை முதலில் இருந்து செய்து வருகிறோம். இப்போதுதான் எல்லோருக்கும் தெரிய தொடங்கியிருக்கிறது.

    நீர்நிலைகளை தூர் வாரவேண்டும்

    நீர்நிலைகளை தூர் வாரவேண்டும்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். உடனடியாக ஏரி, குளங்களை தூர்வாரவேண்டும். மழைக்கு முன்பு அவற்றை சரிசெய்து வைத்து மழைநீரை சேமிக்கவேண்டும்.

    நதிநீர் இணைப்பு

    நதிநீர் இணைப்பு

    பாஜக அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள்.

    வாக்களிக்காதது வருத்தம்

    வாக்களிக்காதது வருத்தம்

    நடிகர் சங்க தேர்தலில் வாக்குசீட்டு உரிய நேரத்தில் எனக்கு கிடைக்கவில்லை. வாக்களிக்காதது எனக்கு வருத்தமாகதான் உள்ளது. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

    English summary
    Actor Rajinikanth has said to solve water issues the water resources should be desilt immediately.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X