சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெரினா பீச்சில் தண்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கன மழை காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

Recommended Video

    சென்னையில் நல்ல மழை.. வெள்ளக்காடான சாலைகள் - வீடியோ

    இன்னொரு பக்கம் பார்த்தால், மயிலாப்பூர் உட்பட பல ஏரியாக்களில் சாலைகளில், முட்டி வரை தண்ணீர் ஓடிக் கொண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்.

    நேற்று இரவு முதல் பெய்த கனமழை தான் இதற்கு காரணம். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுபற்றி கூறியதை பாருங்கள்:

    சென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்சென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்

    எந்த நகரமாக இருந்தாலும்

    எந்த நகரமாக இருந்தாலும்

    சென்னை நகரத்தில், 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை சில மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது மழை. மழை தண்ணீர் வடியும் வரை இன்னும் சில மணிநேரங்களுக்கு தண்ணீர் தேங்கி இருப்பது சகஜம்தான். சென்னை மட்டும் கிடையாது எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கஷ்டம்.

    மெரினா கடற்கரை

    மெரினா கடற்கரை

    மேலும் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக சென்னை மெரினா கடற்கரையில் மழைநீரால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அது பற்றிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    சென்னை வெள்ளம்

    சென்னை வெள்ளம்

    2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரிய பள்ளம் புரட்டிப்போட்டது. ஒரே நாளில் 50 சென்டிமீட்டர் அளவுக்கு மிகப்பெரிய மழை பெய்தது. இதன் காரணமாக நகரமே வெள்ளத்தில் மிதந்தது. விமானப் படை வந்து உணவு பொட்டலங்கள் போடும் அளவுக்கு நிலைமை மோசமானது. இந்த வெள்ள பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்தனர்.

    மெரினா பீச் வெள்ளம்

    மெரினா பீச் வெள்ளம்

    இதன்பிறகு 2017ம் ஆண்டு சென்னையில் நல்ல மழை பெய்தது. முந்தைய வெள்ளம் போல மிகப்பெரிய மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும், பல பகுதிகளில், குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. அந்த காலகட்டத்தில் மெரினா கடற்கரையில் மழைநீர் தேங்கியது. இதற்கு பிறகு இன்று ஒரே நாள் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக மெரினா கடற்கரையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    பெரிய மழை

    பெரிய மழை

    அது மட்டும் கிடையாது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு 24 மணி நேரத்துக்குள் இவ்வளவு பெரிய மழை பெய்தது இதுதான் முதல் முறை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவிக்கிறார். நகரின் மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 100 முதல் 200 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பதை, அவர் சுட்டிக்காட்டுகிறார்.

    English summary
    For the first time after 2017 Chennai Marina beach filled with water stagnation due to heavy rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X