சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வயநாடு.. ராகுல் காந்திக்கு ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி.. சரியாக அடித்தால் சிக்ஸர்.. தவறினால் ஜீரோ!

ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதால் தென்னிந்திய காங்கிரசார் பெருமையில் உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul Gandhi in Wayanad: ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட இப்படி ஒரு காரணம் இருக்கா?

    சென்னை: ராகுல்காந்தி வயநாட்டில் ஜெயிச்சதும் மெய்யாலுமே பொறுப்பை ஏத்துப்பாரா... இல்லாட்டி கடைசி நேரத்துல ராஜினாமா செய்துவிட்டு, குடும்ப சென்ட்டிமென்டான அமேதிக்கு நடையை கட்டி கட்டுவாரா? என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.

    1978-ல் நடந்த இடைத்தேர்தலில் இந்திரா காந்தி கர்நாடகம் சிக்மகளூரில் போட்டியிட்டபோது எல்லோருமே ஆச்சயரிப்பட்டு போனார்கள்.

    சிக்மகளூர் என்றால் சின்னப் பொண்ணு ஊரு என்று பொருள். இந்த அர்த்தத்தை சொல்லி, அதாவது "உங்க இளைய மகள் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்" என்று பிரச்சாரம் செய்து, கடைசியில் அவரை எதிர்த்து நின்ற ஜனதா வேட்பாளரைவிட 70 ஆயிரம் வாக்குகள் அதிகமாகவே பெற்று வெற்றி பெற்றார்.

    சோனியா

    சோனியா

    இதேபோல சோனியாவும் கர்நாடகா பக்கம் போட்டியிட வந்தார். 1999-ல் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். எதிர் வேட்பாளர் சுஷ்மா ஸ்வராஜை தோற்டித்து வெற்றி வாகை சூடினார். அதுபோல இந்த முறை எத்தனையோ பேர் அவரவர் மாநிலங்களில் ராகுலை போட்டியிட வேண்டுகோள் வைத்தாலும் பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது கர்நாடகத்தில்தான்!

    வேட்புமனு

    வேட்புமனு

    இருந்தாலும் வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார், இதற்கு தென்னிந்தியா மீதான அக்கறை என்ற காரணத்தையும் ராகுல் முன்வைத்துள்ளார். சந்தோஷம்தான்!

    ராஜினாமா

    ராஜினாமா

    ஆனால் அன்று இந்திரா, சோனியா இருவருமே 2 தொகுதியில் போட்டியிட்டு வென்றாலும் தங்களது ரேபரேலி, அமேதியை நாடியே சென்றார்கள். கையில் கிடைத்த வாய்ப்பை ராஜினாமா செய்துவிட்டு வடநாட்டு பக்கமே ஆர்வம் காட்டிவிட்டனர்.

    பெரிய மதிப்பு

    பெரிய மதிப்பு

    அதனால்தான் ஒருவேளை வயநாட்டில் ஜெயிச்சாலும் தென்னிந்தியாவை மறந்துவிடுவாரா என்று சந்தேகமாக உள்ளது. ஏனெனில் இதுவரை இந்த 50 ஆண்டு வரலாற்றில் வடநாட்டு தலைவர்கள் யாருமே தென்னிந்திய மாநிலங்களில் தீவிர அரசியல் செய்ததில்லை. ஒருவேளை ராகுல் வயநாட்டை தக்க வைத்து கொண்டால் அது காங்கிரசுக்கே பெரிய மதிப்பை பெற்று தரும். அது மட்டுமில்லை.. இன்னும். 20 வருஷத்துக்கு தென்னிந்தியாவில் காங்கிரசை அசைக்கவும் முடியாது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    மேலும் ராகுல் காந்திக்கு அது ஒரு கோல்டன் ஆப்பர்சூனிட்டி ஆகவும் மாறும். தென்னிந்தியாவில் இருக்கும் பிரச்சனைகள் சொல்லி மாளாது. தண்ணீர் பிரச்சனை உள்பட பல அத்தியாய பிரச்சினைகள் இங்கு தலைவிரித்தாடுகின்றன. இதையெல்லாம் தீர்த்து வைக்கும் மகத்தான வாய்ப்பு ராகுலுக்குக் கிடைக்கும்.

    சுவாரஸ்யம்தான்!

    சுவாரஸ்யம்தான்!

    தமிழ்நாடு - கேரளா இடையிலான நதி நீர்ப் பங்கீடு உலகம் அறிந்த பெரிய பஞ்சாயத்து. முல்லைப் பெரியாறு விவகாரம் சூடாகவே இருக்கிறது. இதை ராகுல் காந்தி எப்படி சமாளிப்பார் என்பது பெரும் சுவாரஸ்யத்துக்குரியது. அதேபோல கர்நாடகா -தமிழ்நாடு, ஆந்திரா - தமிழ்நாடு என பல பிரச்சினைகள் உள்ளன. வட இந்தியத் தலைவராக, தென்னிந்தியாவிலிருந்தபடி இந்த பிரச்சினைகளுக்குக மட்டும் அவர் உரிய தீர்வைக் கண்டால் நான்கு மாநிலங்களும் காலா காலத்திற்கும் ராகுலை கொண்டாடும். அதை விட முக்கியமாக திராவிடக் கட்சிகளால் முடியாததை தேசிய கட்சியான காங்கிரஸ் தீர்த்து வைத்தது என்ற புதிய வரலாறும் எழுதப்படும்.

    அமேதி தொகுதி

    அமேதி தொகுதி

    ராகுலை எப்படியும் தோற்கடிப்போம் கேரள முதல்வர் சொல்லி வருகிறார், இன்னொரு பக்கம், எப்படியும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமேதிக்கு போய்விடுவார் என்று கம்யூனிட்டுகள் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இதுபோக, அமேதி தொகுதியில் ஆஹா ஓஹோவென்ற செல்வாக்கு மக்களிடம் ராகுலுக்கு இல்லை. அதிருப்தியும் இருக்கத்தான் செய்கிறது. அதனால் சென்ட்டிமென்டுக்காக அமேதியை ராகுல் தேர்ந்தெடுக்காமல் இருப்பதும் ஒருவகையில் நல்லதுதான்.

    அவர் வருவாரா?

    அவர் வருவாரா?

    எனவே தங்கள் துயர்துடைக்க வடஇந்திய தலைவர் ஒருவர் வருவாரா என்று, தென்னிந்திய மாநிலங்கள் வழிமேல்விழி வைத்து காத்து கொண்டிருக்கின்றன!

    English summary
    Congress Party South Indian caders excited that Rahul Gandhi in Wayanad constituency. Everybody wants Ragul Gandhi to solve the grievances of the South Indian people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X