சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்ரவரியிலும் வெளுக்க காத்திருக்கிறது மழை... 100 மி.மீ.-க்கு வாய்ப்பு- வெதர்மேன் பிரதீப் வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி மாதமும் கனமழை வெளுக்க காத்திருக்கிறது; 100 மி.மீ. மழை பதிவாக வாய்ப்புள்ளது என்று வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதீப் ஜான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜனவரி மாதம் வரலாறு காணாத மழையை எதிர்கொண்டது தமிழகம். இதேபோல் பிப்ரவரி மாதமும் இதுவரை இல்லாத வகையில் அதிக மழை இருக்கும்.

We are heading towards historic February rainfall, says TN weatherman Pradeep John

பொதுவாக தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மழை குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி சிறப்பான மழைப்பொழிவு மாதமாக இருக்கப் போகிறது.

தமிழகத்தில் ஜனவரி மாதங்களில் பெய்த அதிக மழை அளவு: 1921 - 141.2 மி.மீ, 2021 - 138.0 மி.மீ (23.01.2021 வரை), 1923 - 136.0 மி.மீ, 1920 - 135.9 மி.மீ, 1909 - 116.5 மி.மீ; 1943 - 112.0 மி.மீ.

தமிழகத்தில் பிப்ரவரி மாதங்களில் பெய்த அதிக மழை அளவு: 1984 - 130.8 மி.மீ., 2000 - 74.0 மி.மீ, 1950 - 68.0 மி.மீ, 1930 - 60.3 மி.மீ, 1928 - 54.9 மி.மீ. நடப்பாண்டு பிப்ரவரியில் 100 மி.மீ. மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் கனமழை கொட்டியது. அப்போது டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 2000-ம் ஆண்டு பிப்ரவரியில் கடலூரில் கனமழை கொட்டி வெள்ளத்தை சந்தித்தது. 200 ஆண்டுகளில் 1984-ம் ஆண்டு பிப்ரவரியில்தான் சென்னை பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. 2000-ம் ஆண்டு பிப்ரவரியிலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது.

English summary
Tamilnadu weatherman Pradeep John tweets, After historic January rainfall in Tamil Nadu, we are heading towards historic February rainfall. February is one of the least rainfall month for Tamil Nadu, in its terms we are going to see one of the best February rainfall in recent years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X