சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமித்து ராமர் கோவில் கட்டுவோம்: சு.சுவாமி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமிப்போம் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியில் பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்றது முதலே அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என முழங்கி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அதேபோல் ராமர் பாலம் குறித்தும் தொடர்ந்து பேசுகிறார் சுப்பிரமணியன் சுவாமி.

We can forcibly occupy Ayodhya land fo Ram Temple, says Subramanian Swamy

அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம்; இது தொடர்பாக வழக்குகளைப் போடப் போவதாகவும் கூறி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கான நிலத்தை நரசிம்மராவ் அரசு கையகப்படுத்தியது.

அந்த நிலம் இதுவரை இந்துக்களிடம் ஒப்படைக்கவில்லை. அதனால் தங்களுக்கு உரிய நிலத்தை ஆக்கிரமித்து ராமருக்கான கோவிலை கட்டியே தீருவோம் என பதிவிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் பாஜக தலைவர்கள் அமைதி காத்தும் வருகின்றனர். ஆனால் சுப்பிரமணியன் சுவாமி மட்டும் ராமர் கோவிலை பற்றி பேசியும் எழுதியும் வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP Rajyasabha MP Subramanian Swamy said that, "a)Since PM Rao's undertaking to SC that if there was pre existing Hindu temple, govt will hand over the land to Hindus. b) Ayodhya land was acquired by Govt but has not given yet to Hindus, therefore we can go and forcibly occupy it to build a temple?" in his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X