சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போனில் நடந்த டீலிங்?.. ஹு இயக்குனரிடம் பேசிய ஜிங்பிங்.. ஜெர்மன் புகாருக்கு உலக சுகாதார மையம் பதிலடி!

சீன அதிபர் உடன் உலக சுகாதார மையம் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை, உண்மைகள் எதையும் நாங்கள் மறைக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சீன அதிபர் உடன் உலக சுகாதார மையம் ஒப்பந்தம் எதையும் செய்யவில்லை, உண்மைகள் எதையும் நாங்கள் மறைக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் சீனாதான் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் புகார் வைத்து வருகிறது. சீனா இந்த வைரஸ் குறித்து தொடக்கத்தில் மறைந்தது. இதுதான் வைரஸ் பரவலுக்கு காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இதில் அமெரிக்கா ஒருபடி மேலே போய் கொரோனா வைரஸ் பரவலுக்கு உலக சுகாதார மையமும் ஒரு காரணம், சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார மையம் உண்மைகளை மறைத்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.

ஊரடங்கிற்கு பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள்- கஸ்தூரிஊரடங்கிற்கு பிறகும் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுக்காமல் தாய்மார்களிடம் கொடுங்கள்- கஸ்தூரி

ஜெர்மன் புகார்

ஜெர்மன் புகார்

தற்போது இந்த பரபரப்பை அதிகரிக்கும் வகையில் ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்று முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டது. ஜெர்மன் செய்தி நிறுவனம் டெர் ஸ்பீகல் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்பது உலக சுகாதார மையத்துக்கு தெரியும். ஆனால் அதை உலக சுகாதார மையம் மறைத்து வந்தது. வேண்டுமென்றே உலக சுகாதார மையம் மறைத்தது.

போனில் நடந்த பேச்சு

போனில் நடந்த பேச்சு

உலக சுகாதார மைய இயக்குனர் டெட்ராஸ் ஆதனாம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் உடன் ஜனவரி 21ம் தேதி போனில் பேசினார். அதில் இந்த கொரோனா குறித்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனா ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் என்ற உண்மையை வெளியே சொல்ல கூடாது என்று ஜி ஜிங்பிங் , டெட்ராஸிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் டீலிங் மேற்கொண்டு உள்ளனர் என்று அந்த ஜெர்மன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

செய்தி பொய்யானது

செய்தி பொய்யானது

இந்த கட்டுரை உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது தொடர்பாக உலக சுகாதார மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜெர்மன் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. உலக சுகாதார மையம் சீனா இடையே எந்த விதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. அந்த செய்தி பொய்யானது .

மறுப்பு தெரிவித்தது

மறுப்பு தெரிவித்தது

ஜி ஜிங்பிங்கிடம் டெட்ராஸ் ஜனவரி 21ம் தேதி பேசவில்லை. நாங்கள் 20ம் தேதி கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் என்று அறிவித்துவிட்டோம். உலகில் இருந்து கொரோனாவை விரட்டு உலக சுகாதார மையம் தீவிரமாக முயன்று வருகிறது. இதில் நாங்கள் மக்களிடம் இருந்து எந்த விதமான விஷயங்களையும் இதுவரை மறைத்தது கிடையாது என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்று, உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது.

English summary
Coronavirus: We didn't hide anything about Human Transmission with the China Help says WHO director.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X