சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்ய சொல்லவே இல்லை... மறுக்கும் வருமான வரித்துறை

Google Oneindia Tamil News

சென்னை: எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்யவில்லை என வருமான வரித்துறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

we didnt Recommend cancel the any constituency election in lok sabha polls : income tax debt

முறையான ஆவணங்கள் மற்றும் கணக்குகள் இன்று அதிக பணம் வைத்திருந்தால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளித்துவிடுவார்கள். அவர்கள் சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்துவார்கள். இதுவே நடைமுறையாக இருந்து வருகிறது.

ஒரு சிலர் கோடிக்கணக்கில், கணக்கில் வராத கருப்பு பணம் குவித்து வைத்துள்ளதாக தகவல் வந்தால் உடனே வருமான வரித்துறை அதிகாரிள் அந்த இடத்தையும், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் சோதனை நடத்துவார்கள்.

கள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்! கள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்!

அந்த வகையில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவரின் குடோனில் இருந்து சுமார் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை ஆணையம் சோதனை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் வேலூரில் தேர்தலை நிறுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இறுதி முடிவினை இந்திய தேர்தல் ஆணையம் இன்று எடுக்க உள்ளது.

இந்நிலையில் எந்த தொகுதியிலும் தேர்தலை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்யவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டபடி சோதனை விவரங்களை வழங்குவதே தங்கள் பணி என்றும், நாங்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

English summary
income tax department says we did not Recommend cancel the any constituency election in upcoming lok sabha polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X