சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்முறையில் எப்போதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை - அதிமுக புகாருக்கு டிடிவி தினகரன் பதில்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ் கார்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை அதிமுக, அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.

 புரிஞ்சுக்குங்க.. மோசமான விளைவை ஏற்படுத்தும்.. நதிநீர் உரிமையும் பறிபோகும்.. டிடிவி தினகரன் கண்டனம் புரிஞ்சுக்குங்க.. மோசமான விளைவை ஏற்படுத்தும்.. நதிநீர் உரிமையும் பறிபோகும்.. டிடிவி தினகரன் கண்டனம்

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய
பின்னர், அவரது நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மோதல்

மோதல்

இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் அவர்களது காரில் புறப்பட்டு செல்லும் போது காமராஜர் சாலை அண்ணா சதுக்கம் காவல் நிலையம் சந்திப்பு அருகே இருவரது வாகனத்தையும் டிடிவி.தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதைப்பார்த்த அதிமுக தொண்டர்கள் உடனே அங்கு வந்து அமமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரது காரையும் வழிமறித்து 'டிடிவி.தினகரன் வாழ்க.. சசிகலா வாழ்க' என்று முழக்கமிட்டனர்.

டிடிவி தினகரன் மீது புகார்

டிடிவி தினகரன் மீது புகார்

திடீரென எடப்பாடி பழனிசாமி கார் மீது அமமுகவினர் செருப்பு வீசினர். ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் மீது அமமுகவினர் செருப்பு மற்றும் கற்களை வீசியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கட்டை, போன்ற ஆயுதங்களை அமமுகவினர் எடுத்து வந்ததாகவும் புகாரில் குறிப்பிபாப்பட்டுள்ளது. எடப்பாடி, பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அமமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு தெரிவித்த டிடிவி தினகரன்

மறுப்பு தெரிவித்த டிடிவி தினகரன்

இந்த புகாருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன் என்று பதிவிட்டுள்ளார்.

கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல்

கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல்

பழனிசாமி கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார் டிடிவி தினகரன்.

புனித இடத்தில் வன்முறையா?

புனித இடத்தில் வன்முறையா?

நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.

உண்மை தெரியும்

உண்மை தெரியும்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும் எனவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
TTV Dinakaran has denied any involvement in the attack on the OPS and EPS car. We will never believe in violence, except that the Amma People's Progressive League will face politics democratically," DTV Dinakaran said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X