சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எடப்பாடியை நானோ.. திமுகவோ பொது எதிரியாக நினைக்கவில்லை.. ஏனெனில்... ஸ்டாலின் பொளேர்

Google Oneindia Tamil News

சென்னை: "அ.தி.மு.க.வின் நான்கு ஆண்டுகால முதலமைச்சராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ தி.மு.க.வோ கருதவில்லை" என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியலூர் - பெரம்பலூர் 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் உரையாற்றிய முக ஸ்டாலின் பேசுகையில், ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை உடைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி, நேற்று திருச்சியில் பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க.வை உடைக்க நானோ திராவிட முன்னேற்றக் கழகமோ நினைக்கவில்லை, அது அவசியமும் இல்லை. நாங்கள் சொந்த பலத்தில் நிற்பவர்களே தவிர, அடுத்தவர் பலவீனத்தில் குளிர் காய்பவர்கள் அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

'20'20'ன் கடைசி நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா? பாசிட்டிவ் மாற்றம்'20'20'ன் கடைசி நாளில் தமிழகத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா தெரியுமா? பாசிட்டிவ் மாற்றம்

பொது எதிரி அல்ல

பொது எதிரி அல்ல

அ.தி.மு.க.வின் நான்கு ஆண்டுகால முதலமைச்சராக இருந்த பிறகும், சொந்தக் கட்சியில் பொதுச்செயலாளராக முடியாத ஒரு பலவீனமான மனிதரை, பொது எதிரியாக நானோ தி.மு.க.வோ கருதவில்லை.

கூட்டணி தலைவர்களும் நிராகரிப்பு

கூட்டணி தலைவர்களும் நிராகரிப்பு

‘நான் முதலமைச்சர்', ‘முதலமைச்சர் வேட்பாளர்' என்று பழனிசாமி சொல்கிறாரே தவிர, அவரது கூட்டணிக் கட்சிகளே, குறிப்பாக பா.ஜ.க.வே சொல்லவில்லை. இன்னும் சொன்னால் இவரது கோரிக்கையை அவர்களே நிராகரித்து விட்டார்கள். பழனிசாமி முதலமைச்சர் என்று பன்னீர்செல்வமே பிரச்சாரம் செய்யவில்லை.

கஜனா காலி

கஜனா காலி

இந்த சோகத்தை மறைக்க, இந்த வெட்கத்தை மறைக்க, தி.மு.க. மீதும் என் மீதும் பழி போடுகிறார் பழனிசாமி. தி.மு.க.வை குடும்பக் கட்சி என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார்.

பகல் கொள்ளை

பகல் கொள்ளை

தனது குடும்பத்திற்குச் சொத்து சேர்க்கவே முதலமைச்சர் பதவியையும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும் கடந்த 10 ஆண்டுகாலத்தில் பயன்படுத்தி, தமிழ்நாட்டைப் பாழாக்கியவர் பழனிசாமி. ஏழைகளுக்குக் கொடுப்பதைத் தடுக்கும் இவர் ஒரு தலைவரா என்று கேட்டுள்ளார் பழனிசாமி!

டோக்கன்

டோக்கன்

கொடுப்பதை நான் தடுக்கவில்லை. ஏன் குறைவாகக் கொடுக்கிறீர்கள் என்று தான் கேட்டேன். ஏப்ரல் மாதம் முதல் 5000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னவன் நான். அப்போதெல்லாம் கொடுக்காத கல்நெஞ்சக்கார பழனிசாமி எல்லாம் மனிதரா? இன்று அவர் ஏழைகளுக்கு இரக்கப்பட்டு 2500 ரூபாய் தரவில்லை; தேர்தலுக்காகக் கொடுக்கிறார். அரசு பணத்தை அ.தி.மு.க. நலனுக்காகக் கொடுக்கிறார். அ.தி.மு.க. டோக்கன் கொடுத்து அவர் தான் மாட்டிக் கொண்டார். வழக்குப் போட்டோம். ஆர்வக் கோளாறாகச் சிலர் கொடுத்துவிட்டார்கள் என்று திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அரசு தான் இது!" இவ்வாறு ஸ்டாலின் கடுமையாக கூறினார்.

English summary
We do not consider the weak Edappadi Palanisamy, who cannot be the general secretary of his own party, as a common enemy, ”said DMK leader mk Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X