சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இல்லாட்டி இப்படி பேசுவாங்க.. வேலூரில் ஜெயிச்சே ஆகணும்.. அலட்சியம் கூடாது.. ஸ்டாலின் கறார் உத்தரவு

இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை ஓய்வு பெற வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: வேலூர் லோச்பா தேர்தலில் நாம் வென்றே ஆக வேண்டும் என்றும், அலட்சியமாக இருந்து கோட்டை விட்டுவிடக்கூடாது என கட்சி நிர்வாகிளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கறாராக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் லோக்சபா தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளார் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் வேலூர் தேர்தல் வெற்றி குறித்து ஆலோசிக்க நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் திங்கள்கிழமை மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் விபி துரைசாமி, ஐ பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

37 தொகுதிகளில் வெற்றி

37 தொகுதிகளில் வெற்றி

இந்த கூட்டத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய முக ஸ்டாலின், "37 தொகுதிகளில் வென்றுவிட்டோம் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

இதுதான் உண்மையான வெற்றி

இதுதான் உண்மையான வெற்றி

37 தொகுதிகளில் பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றோம் என கூறிக்கொண்டு இருக்கிறார்கள். வேலூர் தொகுதிகளிலும் இதைத்தான் சொல்வார்கள். எனவே வேலூர் தொகுதி தேர்தலில் எப்படியும் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதுதான் உண்மையான வெற்றியாக அமையும். 2 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது. அதிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்" இவ்வாறு கூறினார்.

ஸ்டாலின் உத்தரவு

ஸ்டாலின் உத்தரவு

வேலூர் லோக்சபா தேர்தலில் பணியாற்றுவதற்காக பொறுப்பு, திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்களுக்கு பகுதி பகுதியாக பிரித்து கொடுத்து தேர்தல் பணியாற்றுமாறு முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆளும் கட்சி கூட்டணி

ஆளும் கட்சி கூட்டணி

அதேநேரம் வேலூர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அதிமுகவும் தீவிரமாக உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருப்பதால் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் உற்சாகமாக பணியாற்றி வருகிறார். போட்டி கடும் சவாலாக இருக்கும் என தெரிகிறது.

English summary
dmk leader mk stalin tells party districts secretaries, we should win vellore lok sabha election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X