சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவசரப்படாதீங்க... அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்கிறார் கே.பி முனுசாமி

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அவசரப்படாமல் இருங்கள்... நீங்கள் எதிர்பார்க்கும் முதல்வர் வேட்பாளர் யார் என்று உரிய நேரத்தில் கட்சி நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறியுள்ளார். கொரோனாவை எதிர்கொள்வதில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாகவும், முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறியுள்ளார்.

அதிமுகவில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நான்காண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த நிலையில் ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது.

அண்மையில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு அதிரடி பதிலை அளித்தார். அதாவது 2021-ஆம் ஆண்டு சட்டசபை உறுப்பினர்கள் கூடி யாரை தேர்வு செய்கிறார்களோ அவரே முதல்வர் வேட்பாளர் என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேசினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

 ஸ்டாலினுக்கு ஸ்டாலினுக்கு "ஒர்க் அவுட்" ஆகுதோ.. பெரும்பான்மை கிடைக்குமாம்.. அழுத்தமாக டிக் அடித்த வாசகர்கள்!

அதிமுகவில் சலசலப்பு

அதிமுகவில் சலசலப்பு

அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என்று கூறினார். முதல்வர் யார் என்று பொதுவெளியில் பேசுவது பலவீனத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். முதல்வர் வேட்பாளர் பற்றி கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் வேட்பாளர் பற்றி பேசுவது கட்சியின் ஒற்றுமையை பாதிக்கும் என்று கூறினார்.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

முதல்வர் வேட்பாளர் யார் என்பது ஆளுக்கு ஒரு கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வர் வேட்பாளர் யார்

முதல்வர் வேட்பாளர் யார்

நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, சட்டசபைத் தேர்தல் தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றதாக கூறினார். முதல்வர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முனுசாமி, முதல்வர் வேட்பாளர் யார் என்று கட்சி நிர்வாகிகள் தலைமைக்கழக நிர்வாகிகள் கூடி ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று கூறினார்.

அதிமுக பாஜக கூட்டணி

அதிமுக பாஜக கூட்டணி

அதிமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று பாஜக தமிழக தலைவரே கூறியிருக்கிறார். அதற்குப் பிறகு என்ன வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருந்தது. இப்போதும் அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது.
வி.பி துரைசாமி நேற்று வரை வேறு கட்சியில் இருந்து விட்டு இப்போது பாஜகவிற்கு வந்திருக்கிறார். அவர் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார் கே.பி. முனுசாமி.

English summary
AIADMK Deputy Coordinator KP Munuswamy has said that AIADMK chief executives will consult and announce the AIADMK chief ministerial candidate in due course.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X