Just In
2025-ல் காசநோய் இல்லாத சூழலை உருவாக்குவோம்... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
சென்னை: 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2025-ல் காசநோய் இல்லாத சூழலை
கொண்டு வருவோம் என்றார்.

மேலும், 0.46 என்ற அளவில் உள்ள தொழுநோயை இல்லாமல் ஆக்குவோம் என்றும், 2025-ல் காசநோய் இல்லாத சூழலை கொண்டு வருவோம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும் என்றும் கூறினார்.
மேலும், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வில் இந்தியாவிலேயே தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.