சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ

    சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    இந்தியாவின் பொருளாதார சரிவு தினமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பொருளாதார சரிவு குறித்து தற்போது மத்திய அரசின் முக்கிய அதிகாரிகளும், பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகரும் கூட குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கி உள்ளனர்.

    We will decrease the GST rate says FM Nirmala Sitharaman

    இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், இந்தியா மட்டும் பொருளாதார மந்த நிலையில் இல்லை. தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம்.எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும்.

    ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டியில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்படும்.ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறோம். ஜிஎஸ்டி ரிபண்ட் தொகை தொடர்பான முடிவுகள் 30 நாட்களில் எடுக்கப்படும்.

    பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

    வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ரெபோ விகிதம் குறைக்கப்பட்ட உடன் இஎம்ஐ உடனடியாக குறைக்கப்படும். அனைத்து வரி சிக்கல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

    ஸ்டார்ட் அப் நிறுவன முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் அரசு நிறைவேற்றும். வீட்டு கடன், வாகன கடன் வட்டிகள் உடனடியாக குறைக்கப்படும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    We will decrease the GST rate says FM Nirmala Sitharaman in Press Meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X