சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவா, அதுவா.. இருக்கிறோமா.. இல்லையா... குழம்பி தவிக்கும் அதிருப்தி எம்எல்ஏக்கள்

தினகரனையும் கூட்டத்துக்கு கூப்பிட்டிருக்க வேண்டும் என்று ரத்தின சபாபதி கூறினார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் சண்முகத்தை தொடந்து இன்னும் 2 பேர் போர்க்கொடி

    சென்னை: அதிமுக, திமுகவை விடுங்க.. யார்பக்கம் என்றே சொல்லாமல் இன்று வரை கருதப்படும் 3 அதிருப்தி எம்எல்ஏக்களின் நிலையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது!

    தேர்தலுக்கு முன்பு வரை அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோரின் ஆதரவு கட்சிகளுக்குமே குறிப்பாக அதிமுகவுக்கு தேவையானதாக இருந்தது.

    அப்போதெல்லாம் தினகரனுக்கு ஆதரவா, அதிமுகவுக்கு ஆதரவா என்பதை வெளிப்படையாக சொல்லாமல் குழப்பி அடித்து வந்தனர்.

    உட்கட்சி மோதல் : அதிமுக கூட்டத்தில் கடும் விவாதம்- 2 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை! உட்கட்சி மோதல் : அதிமுக கூட்டத்தில் கடும் விவாதம்- 2 அமைச்சர்கள், 4 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை!

    நிலைப்பாடு

    நிலைப்பாடு

    தேர்தல் ரிசல்ட்டுக்கு பிறகு அப்படியே நிலைப்பாடு உல்டா ஆனது. "நாங்கள் அதிமுகவில்தான் இருக்கிறோம். அமமுகவில் உறுப்பினராக இல்லை" என்று கூட்டாக 3 பேருமே சொன்னார்கள். படுதோல்வி காரணமாக எத்தனையோ நிர்வாகிகள் அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு ஜம்ப் ஆகி வருவதால், இவர்களும் அதிமுகவில்தான் ஐக்கியம் என்பது ஓரளவு உறுதியானது.

    முதல் தைரியம்

    முதல் தைரியம்

    ஆனால் விஷயம் என்னவென்றால், இவர்கள் 3 பேரையுமே அதிமுக கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது என்பதுதான். இதற்கு காரணம், ஆட்சிக்கு பாதகம் இல்லாதவரையில் 9 இடங்களில் வெற்றி பெற்று விட்டது அதிமுக. முதல் தைரியமே இதுதான்.

    தலைமை அலுவலகம்

    தலைமை அலுவலகம்

    அடுத்ததாக, நேற்றுவரை அமமுக சார்பாக இருந்தவர்கள், நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒருஎண்ணம் அதிமுக தலைமைக்கு இருந்து கொண்டே இருந்தது. அதனால் முழுசுமாக இவர்கள் 3 பேரையுமே நம்பவில்லை. இதனிடையேதான், நேற்று அதிமுக மா.செ. கூட்டம். தலைமை அலுவலகத்துக்கு இவர்கள் வந்திருந்தனர்.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    அப்போது ரத்தினசபாபதி பேசும்போது, நாங்களும் அதிமுக தொண்டர்கள் தான். எல்லா தொண்டர்களையும் தலைமை அரவணைத்து போக வேண்டும். எனக்கும், தினகரனுக்கும் அரசியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டார்களா என தெரியவில்லை.

    நிலைப்பாடு

    நிலைப்பாடு

    சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், எங்களிடம் ஆதரவு கேட்டால் அப்போது முடிவு எடுப்போம். நாங்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அழைப்பு விடுக்காமல் எப்படி வர முடியும் என்று கேட்டார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லையே.. தினகரனையும் இவர்கள் கூப்பிட்டிருக்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார். அப்படியானால், இவர்கள் 3 பேரின் உண்மையான நிலைப்பாடு என்ன வென்று இதுவரை மக்களுக்கு தெரியாமலேயே உள்ளது.

    யார் பக்கம்?

    யார் பக்கம்?

    உண்மையிலேயே இவர்கள் அதிமுக எம்எல்ஏக்களா, அமமுக எம்எல்ஏக்களா, அல்லது பல் பிடுங்கின பாம்பு போல இவர்களை அதிமுக நடத்த முயல்கிறதா என்றெல்லாம் புரியாமலேயே உள்ளது!

    English summary
    MLA RathinaSabapathi says inform our stands in the Assembly polls and supports TTV Dinakan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X