சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அப்பல்லோவில் ஜெ. பெற்ற சிகிச்சை வீடியோவை ரிலீஸ் செய்வேன்.. பரபரப்பை கிளப்பும் வெற்றிவேல்

Google Oneindia Tamil News

சென்னை:ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோக்களை தேவைப்பட்டால் வெளியிடுவோம் என்று அமமுக செய்தித் தொடர்பாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான வெற்றிவேல் அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016-ல் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். 70 நாட்களும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2016 டிசம்பர் 5-ல் மரணமடைந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து, 2017ம் ஆண்டு செப்டம்பரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

விசாரணை நடத்திய ஆறுமுகசாமி

விசாரணை நடத்திய ஆறுமுகசாமி

அப்பல்லோ மருத்துவர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், அமைச்சர்கள் என பல கட்டங்களில் அந்த ஆணையம் விசாரணை நடத்தியது. அவர்களின் கருத்துகளையும் ஆணையம் பதிவு செய்தது.

தொடர்ந்து கோரிக்கை

தொடர்ந்து கோரிக்கை

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழிந்தபின்னரும்.. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விவகாரம் முற்றுபெறவில்லை. மருத்துவமனையில் அவருக்கு நடந்தது என்ன என்பதை இந்த உலகம் அறிய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

மருத்துவக்குழுவிடம் விசாரணை

மருத்துவக்குழுவிடம் விசாரணை

கோரிக்கை வலுக்கவே.. ஆணையத்தின் விசாரணையும் தீவிரமானது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் தரப்பு புகார்

டிடிவி தினகரன் தரப்பு புகார்

விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும்.. ஜெயலலிதாவுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது, அதன் விவரங்கள் என்ன என்பது அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ்சுக்கும், இப்போது முதல்வராக வீற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றாக தெரியும் டிடிவி தினகரன் தரப்பு தொடர்ந்து கூறி வந்தது.

வெளியான முதல் வீடியோ

வெளியான முதல் வீடியோ

ஒரு கட்டத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்த நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் ஆர்கே நகர் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. அதன் உபயத்தினாலோ என்னவோ.. டிடிவி தினகரன் எம்எல்ஏவானதாக ஒரு கருத்து உண்டு. டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் அந்த வீடியோவை வெளியிட்டார்.

இதோ.. இன்னொரு வீடியோ

இதோ.. இன்னொரு வீடியோ

இப்போது அதே பரபரப்புக்கு நிகரான ஒரு கருத்தை வெற்றிவேல் வெளியிட்டு அரசியல் களத்தை அதிர வைத்திருக்கிறார். ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். சென்னை செம்பியம் பகுதியில் அமமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேட்டியளித்த வெற்றிவேல்

பேட்டியளித்த வெற்றிவேல்

அதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு வெற்றிவேல் பேட்டி அளித்தார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோக்களை தேவைப்பட்டால் வெளியிடுவோம் என்றார்.

எஞ்சிய வீடியோக்கள்

எஞ்சிய வீடியோக்கள்

அவர் மேலும் கூறியதாவது:சில அமைச்சர்கள் அப்போலோ சிகிச்சை பற்றி பேசியதால், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே வீடியோ வெளியிடப்பட்டதாக கூறினார். தேவைப்பட்டால் தங்களிடம் இருக்கும் மற்ற வீடியோக்களும் வெளியிடப்படும் என்று வெற்றிவேல் கூறினார்.

English summary
Jayalaithas treatment video will be released, says AMMK spokesperson and former mla Vetrivel in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X