சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசு ஓகே சொன்னால்தான் மேகதாது அணை.. கர்நாடகாவிற்கு செக் வைத்த காவிரி ஆணையம்

தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று காவிரி ஆணையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசு அனுமதித்தால் மேகதாது அணை: காவிரி ஆணையம் அறிவிப்பு- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று காவிரி ஆணையம் தெரிவித்துள்ளது.

    பெங்களூரின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும், கூடுதலாக காவிரி நீரை பெறவும் திட்டமிட்டு காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இதற்காக வரைவு அறிக்கையை அம்மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருந்தது.

    We wont allow to build Mekedatu dam without Tamilnadus nod says Cauvery Commission

    [மேகதாது.. மத்திய அரசின் அனுமதியை வாங்கி விட்டு.. தமிழகத்தை பேச்சுக்கு அழைக்கும் கர்நாடகா! ]

    இந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் காவிரி பங்கீட்டில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஆணையமான காவிரி ஆணையம், இதில் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவிரி ஆணையத் தலைவர் மசூத் ஹுசைன் பேட்டியளித்துள்ளார்.

    அதில், தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க மாட்டோம். காவிரியில் எங்கு அணை கட்ட வேண்டும் என்றாலும் தமிழகத்திடம் கர்நாடகா அனுமதி வாங்கி வேண்டும்.

    காவிரி ஆற்றின் படுகையில் மேகதாது அணை வருகிறது. அதனால் தமிழக அரசிடம் அனுமதி வாங்கியே ஆக வேண்டும். தமிழக அரசு அனுமதி கொடுத்தால் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிப்போம் என்று மசூத் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    English summary
    We won't allow Karnataka to construct Mekedatu dam without Tamilnadu's nod says Cauvery Commission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X