சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூட்டணிக்குள்ளேயே இருந்து.. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்.. அன்புமணி உறுதி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விட மாட்டோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Anbumani on Hydro carbon: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்: அன்புமணி உறுதி- வீடியோ

    சென்னை: "அதிமுக கூட்டணியில் இருந்தாலும் எங்களுடைய கொள்கையை விட்டுத்தர மாட்டோம். குறிப்பாக டெல்டா மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வர விடமாட்டோம்" என்று அன்புமணி ராமதாஸ் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு டெல்லியில் இன்று இரவு அசோகா ஸ்டார் ஹோட்டலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார். இந்த விருந்தில் அதிமுக கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

    பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி கிளம்பி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

    நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம் நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்

    மோடி ஆட்சி

    மோடி ஆட்சி

    மோடியே திரும்பவும் பிரதமராக வருவார். இது வெறும் கருத்து கணிப்பு மட்டுமல்ல. இதை தான் நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே சொல்லி வருகிறோம். தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும்.

    குடிநீர் பிரச்சனை

    குடிநீர் பிரச்சனை

    தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்போதே இந்நிலை என்றால், இன்னும் வரும் காலங்களில் அதிக வறட்சி வர வாய்ப்புள்ளது. அதனால் ஆட்சியாளர்கள் குடிநீர் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    கடும் வறட்சி

    கடும் வறட்சி

    நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தருவதுடன், மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்க வேண்டும். குறிப்பாக கோதாவரி காவிரி திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை நிச்சயம் வலியுறுத்துவோம்.

    ஹைட்ரோ கார்பன்

    ஹைட்ரோ கார்பன்

    கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கொள்கையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். டெல்டா மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வரவே விடமாட்டோம். கூட்டணிக்குள்ளே இருந்து அதனை எதிர்ப்போம். இது மட்டுமல்ல, மக்களுக்கு எது எல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அது எல்லாவற்றையும் நாங்களும் எதிர்ப்போம்" என்றார்.

    English summary
    PMK Anbumani Ramadoss said that if we are in the coalition, we will not let the hydro project come
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X