சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் இன்று கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் !

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்பட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    'Heat Will Increase' - Tamilnadu Weatherman and IMD Weather Update

    ஆம்பன் புயல் இன்று மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடப்பதால் வங்கதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பல்வேறு இடங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.

    weather forecast for tamil nadu: Light to moderate rain is likely to occur at isolated places Tamilnadu

    ஆனால் ஆம்பன் புயலால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு ஏற்படவில்லை. அதேநேரம் வெப்பநிலை அடுத்த சில நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாகவே இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் இன்று மழை எப்படி இருக்கும் என்பது குறித்த சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    ஆம்பன் புயலால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும்.. வானிலை மையம்ஆம்பன் புயலால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு வெப்பம் கடுமையாக அதிகரிக்கும்.. வானிலை மையம்

    வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 155-165 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். சூறாவளி காற்று இடையிடையே 185 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும். இந்த காலகட்டங்களில் கடல் மிக சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் தெற்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்என அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்ஸையும் குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Light to moderate rain is likely to occur at Dindigul,Kanyakumari Theni, Nilgiris, Tiruppur, Virudhunagar, Tirunelveli and coimabatore districts
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X