சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப அரிதான நிகழ்வு.. "இந்த" தேதியில் இங்கெல்லாம் மழை கொட்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த வார்னிங்!

வெதர்மேன் வெளியிட்டுள்ள கணிப்பில், MJO என்று அழைக்கப்படும் madden julian oscillation அலைவு காரணமாக இந்த அரிதான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போவதாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இது தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த முறை எதிர்பார்த்ததை விட நல்ல மழையை கொடுத்தது. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்தது.

ஆனால் தென் மாவட்டங்களில் இந்த முறை பெரிதாக மழை பெய்யவில்லை. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் இந்த முறை எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.

படையெடுக்கும் மழை மேகங்கள்.. சென்னை மக்களே உஷார்! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படையெடுக்கும் மழை மேகங்கள்.. சென்னை மக்களே உஷார்! உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வெயில்

வெயில்

சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் கூட சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்குத்தான் அதிக மழையை கொடுத்தது. பெரிதாக மத்திய மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கவில்லை. கிழக்கு காற்று காரணமாகவே மத்திய தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. மாண்டஸ் புயல் சென்ற பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல்கடந்த மாதம் கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது. அப்போதும் தீவிர காற்று வீசியதே தவிர மழை பெரிதாக பெய்யவில்லை.

மழை

மழை

இந்த நிலையில்தான் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வு பகுதி உருவாகும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கி உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 3 நாட்களில் முழுமையாக நகர்ந்து இருக்கும். ஆனால் இதனால் பெரிய மழை இருக்காது.

வறண்ட வானிலை

வறண்ட வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின்பே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆனால் எல்லா இடங்களிலும் பெய்யாது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்யலாம். மற்றபடி தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வானிலை வறண்டு காணப்படும். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் வானிலை வறண்ட காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெதர்மேன்

வெதர்மேன்

இது தொடர்பாக வெதர்மேன் வெளியிட்டுள்ள கணிப்பில், MJO என்று அழைக்கப்படும் madden julian oscillation அலைவு காரணமாக இந்த அரிதான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போவதாக தெரிவித்துள்ளார். அதில், ஜனவரி 29, 30 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். அதேபோல் பிப்ரவரி 5/6 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். தென் தமிழ்நாட்டிலும் நல்ல மழை பெய்யும். இலங்கையில் மிக கனமழை பெய்ய போகிறது. சென்னையில் 29 மற்றும் 31 தேதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

English summary
MJO induced rare low pressure to give rains in Tamil Nadu says Weatherman Pradeep John.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X