சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பிக்கும் தமிழ்நாடு.. அந்தமான் கடலில் உருவாகும் புயல் சின்னம்.. எங்கே தாக்கும்? எப்போது தாக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. கடந்த மாதங்களில் அடுத்தடுத்து இரண்டு தாழ்வு பகுதிகள் உருவானது. அதில் ஒன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இரண்டும் வட தமிழ்நாடு மாவட்டங்களை தாக்கி சென்னைக்கு அருகே கரையை கடந்து சென்னையில் கனமழையை கொடுத்தது. அதன்பின் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக உருமாற்றம் அடையாமல் கனமழையை கொடுத்தது.

காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது... எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது... எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு

கனமழை

கனமழை

இதனால் சென்னை தொடங்கி குமரி வரை கடந்த 1 வாரத்திற்கு கனமழை பெய்த நிலையில் நேற்று பிற்பகலுக்கு பின் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. சென்னையில் மட்டும் கடைசியாக நேற்று மாலையும், இரவும் கனமழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து சென்னையில் மழை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல்

வங்கக்கடல்

இந்த நிலையில்தான் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது. நேற்று உருவான இந்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா

ஒடிசா

அதன்பின் வலுப்பெறும் இந்த தாழ்வு மண்டலம் மத்திய வங்கக்கடல் பகுதி வழியாக பயணித்து 3ம் தேதி அதிகாலை புயலாக மாறும். புயலாக மாறும் தாழ்வு பகுதி டிசம்பர் 4ம் தேதி ஒடிசாவில் கோபால்பூர் அருகே கரையை கடக்கும். ஆந்திராவிற்கு ஒடிசாவிற்கும் இடையே கோபால்பூர் பகுதியில் இது கரையை கடக்க உள்ளது என்று இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Chennai-க்கு நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஈரப்பதமான மேகங்களை இந்த தாழ்வு மண்டலம் இழுத்து செல்லும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 1 வாரத்திற்கு மிகவும் வறண்ட வானிலையே காணப்படும். இந்த புயல் சின்னத்தால் தமிழ்நாட்டில் மழை பெய்யாது. தமிழ்நாட்டிற்கு இதனால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Weather Report: New Low Pressure will convert into a cyclone and make landfall in Odisha on 4th December.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X