சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை தொடங்கி ராமநாதபுரம் வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலோடு மழை கொட்டும்

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை ப

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் எனவும் கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு மதுரை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 24 மணிநேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 8 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. புதுக்கோட்டையில் 7 செமீ மழையும், வேலூரில் 6 செமீ மழையும் ராணிப்பேட்டையில் 3செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

 Weather warning on July 9th 2020 Chennai met office

அதில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் நிரம்பிய மதுரை சாலைகள்இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் நிரம்பிய மதுரை சாலைகள்

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வடக்கு குஜராத் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai Regional met office weather warning on July 9th 2020. 10 district get rain including in TamilNadu 10 district get rain lightning and thunder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X