சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று தமிழகமே சும்மா குளுகுளுனு இருக்கும்.. டிச. 15 தேதிக்கு பிறகும் நல்ல மழையிருக்கு!.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்யும் என்றும் டிசம்பர் 15-ஆம் தேதிக்கு பிறகும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் டிசம்பர் மாதம் பாதியிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். சென்னைக்கு இது நல்ல மழையை கொடுத்துள்ளது.

இந்த சீசனில் நாம் 90 செமீ. மழையை விட அதிகமாகவே பெற்றுள்ளோம். 100 செ.மீ. மழைக்கு கனவு காண்போம். இன்று சென்னைக்கு சிறப்பான நாள். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்.

திண்டுக்கல்

திண்டுக்கல்

தற்போது உள்ள மேகக் கூட்டங்கள் அப்படியே இருந்தால் நல்ல மழையை கொடுக்கும். புரேவி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் இருந்தால் மீண்டும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மேற்கு தமிழகமான திருப்பூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

தமிழகம்

தமிழகம்

குறிப்பிட்டு ஒரு மாவட்டத்தை மட்டும் சொல்ல முடியாது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கே இன்று நல்ல மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும். ஓக்கி புயல் போல் காற்று வீசாது. இன்றைய நிலவரப்படி நாகையில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 33.7 செ.மீ. மழை பெய்துள்ளது

தலைஞாயிறு

தலைஞாயிறு

அடுத்தபடியாக மணல்மேட்டில் 24.7 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ மழையும் குடவாசலில் 21 செ.மீ மழையும் பெய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 19.7 செ.மீ. மழையும் தலைஞாயிறில் 14.9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

சென்னை

சென்னை

ராமேஸ்வரத்தில் 12 செ.மீ., முக்குளத்தூரில் 10.5 செ.மீ. திருவாரூரில் திருத்துறைப்பூண்டியில் 13 செ.மீ., தஞ்சையில் அதிராம்பட்டில் 10 செ.மீ. மழையும் விழுப்புரம் மரக்காணத்தில் 8.2 செ.மீ. மழையும் காட்டுமன்னார்கோயிலில் 7.2 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 9 செ.மீ. மழையும் திருக்கழுக்குன்றத்தில் 7.8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

English summary
Tamilnadu Weatherman Pradeep John says that more rains expected in 2nd half of December.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X