சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முழு கொள்ளளவை எட்டிய வீராணம்.. 43 மடங்கு தரமான சம்பவத்தை தரும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 2019-ஆம் ஆண்டை காட்டிலும் 43 மடங்கு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலை சிறப்பாக இருக்கிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    முழு கொள்ளளவை எட்டிய Veeranam: TN Weatherman என்ன சொல்கிறார் ?

    இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளதாவது: வீராணம் ஏரி வறண்டுவிட்டதால் கடந்த 2019ஆம் ஆண்டு கோடை காலம் சென்னையில் மிகவும் மோசமாக இருந்தது, அது போல் அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2017 ஆம் ஆண்டும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

    2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு பருவமழை பொய்த்து போனது. இதனால் சென்னையில் 2019-இல் நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

    13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்.. வெதர்மேன் ஹேப்பி13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்.. வெதர்மேன் ஹேப்பி

    வீராணம் ஏரி

    வீராணம் ஏரி

    சென்னையில் குடிநீர் பஞ்சம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. போனது போகட்டும், ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏரிகளில் தண்ணீர் சேமிப்பில் நாம் இரண்டாவது முறையாக வெற்றி கண்டுள்ளோம். காவிரி நீருக்கு நன்றி சொல்வோம். வீராணம் ஏரி மீண்டும் நிரம்பியுள்ளது. இன்று வரை பூண்டியில் உள்ள ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

    குறைந்த மழை

    குறைந்த மழை

    ராயலசீமா மற்றும் ஆந்திரத்தின் தெற்கு பகுதியில் இந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் தண்ணீர் பற்றாக்குறை என்பது குறைவாகவே இருக்கும். கிருஷ்ணா ஆற்று பகுதிகளான மகாபலேஷ்வர் மற்றும் துங்கபத்ராவில் உள்ள ஆகும்பே ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு குறைந்த மழை பொழிவை பெற்றன.

    முக்கிய பகுதிகள்

    முக்கிய பகுதிகள்

    எனினும் ஸ்ரீசைலம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த அடைமழை மேற்கண்ட இடங்களில் குறைந்த மழைக்கு ஈடுகட்டியது. இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள அணைகளில் ஏராளமான நீர் தேங்கியுள்ளது. தென் சென்னையிலும் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. மத்திய சென்னையில் முக்கிய பகுதிகளில் அந்தளவுக்கு மழை கைகொடுக்கவில்லை. மற்ற இடங்களில் பின்னி பெடலெடுக்கிறது.

    தயார் நிலை

    தயார் நிலை

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நிலத்தடி நீர் மட்டம் சிறப்பாகவே உள்ளது. இதனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் விஷயங்கள் சென்னைக்கு சிறப்பானதை கொடுக்கும். அந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழை காலமும் தயார் நிலையில் இருக்கும் என்றார் தமிழ்நாடு வெதர்மேன்.

    English summary
    Tamilnadu Weatherman says that Veeranam lake reaches full level and Chennai water supply lakes is 43 times better than 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X