மேடையில் மாப்பிள்ளையை ஓரம் கட்டி.. மணப்பெண்ணுக்கு குறிவைத்த போட்டோகிராபர்! அடுத்து நடந்த ட்விஸ்ட்
சென்னை: கொஞ்சம் தள்ளிப்போங்க என்று மாப்பிள்ளையை சொல்லிவிட்டு, மணமேடையில் கல்யாண பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மாப்பிள்ளையிடம் செம்ம அடிவாங்கினார் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுவதாக சொல்வார்கள். அவர்களின் அன்றை அழகு முகம்எப்படி வெளி உலகிற்கு தெரிய வேண்டும் என்பதை போட்டோகிராபர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.
மேக்கப்பும், அழகான உடையும், கல்லாண கலையும் மணப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் அழகாக்கி விடும் நாள் தான் மணநாள். அன்றைய நாளில் மாப்பிள்ளையைவிட மணப்பெண் தான் அழகான உடை அணிந்து, தலையில் நன்றாக அலங்காரம் செய்து, அதிக அளவில் நகைகள் அணிந்து, அற்புதமாக மேக்கப்போட்டு மணமேடையில் தோன்றுவார்கள்,.

இப்படியொரு பெண்
திருமணத்திற்கு வந்திருப்பவர்கள் மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் பார்த்து இவனுக்கு இப்படிபொரு பெண்ணா என்று வாய்க்குள் முணங்கியபடி அட்சணை தூவி வாழ்த்துவார்கள். ஏனெனில் அந்த அளவிற்கு மணப்பெண் அன்று அழகாக காணப்படுவார்.
|
உணர்வுகளும் வீடியோ
மணப்பெண் மற்றும் மாப்பிள்ளையை விதவிதமான கோணத்தில் புகைப்படக்கார்கள் புகைப்படம் பிடிக்க, அவர்கள் உணர்வுகளை வீடியோகிராபர்கள் வீடியோ எடுக்க அழகான நினைவுகளாக அவை காலத்திற்கும் அவர்களுக்கு இருக்கும்,

மாப்பிள்ளை
அப்படி காலத்தால் நிலைக்க வேண்டிய கல்யாண விழாவில் மாப்பிள்ளையை சொல்லிவிட்டு, மணமேடையில் கல்யாண பெண்ணை மட்டும் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மாப்பிள்ளையிடம் செம்ம அடிவாங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மாப்பிள்ளை அடித்தார்
அந்த வீடியோவில். சிகப்பு நிற உடையில் மணப்பெண் அழகாய் காட்சியளிக்கிறார். அருகில் மாப்பிள்ளை நிற்கிறார். அப்போது அங்கு வரும் புகைப்படகாரர் அருகில் நிற்கும் மணமகனை தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு மணப்பெண்ணை மட்டும் புகைப்படம் எடுக்கிறார் போட்டோக்காரர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாப்பிள்ளை புகைப்படக்காரர் மீது ஆத்திரத்தில் பொங்கி அடித்துவிட்டார். மணப்பெண் இதை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார். எந்த ஊர் என்று தெரியவில்லை. வீடியோ மட்டும் வேகமாக பரவி வருகிறது.