சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடமாட்டோம்.. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை போராடுவோம்.. பேரணியில் கொதித்த மம்தா

Google Oneindia Tamil News

சென்னை: குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம், பேரணி நடைபெற்று வரும் நிலையில் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேரணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும் தேசிய குடிமக்கள் பதிவுக்கு எதிராகவும் நாம் தொடர்ந்து போராடுவோம். அவை இரண்டும் திரும்ப பெறப்படும் வரை நாம் போராடுவோம்.

ஒரு போதும்

ஒரு போதும்

பாஜக மட்டுமே நாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மற்றவர்களை வெளியேற்றிவிடுவார்கள். இதுதான் அவர்களின் அரசியல். அது ஒரு போதும் நடக்கக் கூடாது.

வசிக்கவில்லையா

வசிக்கவில்லையா

இந்தியா அனைவருக்கும் சொந்தமானது. குடியுரிமை சட்டம் யாருக்கானது? நாம் எல்லாம் இந்திய குடிமக்கள். நீங்கள் யாரும் ஓட்டு போடுவதில்லையா? நீங்கள் இங்கு வசிக்கவில்லையா?

பீகார் முதல்வரும்

பீகார் முதல்வரும்

என்ஆர்சிக்கு நான் மட்டும் ஒரு காலத்தில் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் இன்றோ டெல்லி முதல்வர் சொல்கிறார் குடியுரிமை சட்டத்தையும் என்ஆர்சியையும் அனுமதிக்க முடியாது என்று. அது போல் பீகார் முதல்வரும் என்ஆர்சியை அனுமதிக்க மறுக்கிறார்.

முதல்வர்

அவருக்கு நான் சொல்கிறேன், குடியுரிமை சட்டத்திருத்தத்தையும் அனுமதிக்காதீர். தற்போது மத்திய பிரதேச முதல்வர், பஞ்சாப் முதல்வர், சத்தீஸ்கர் முதல்வர், கேரள முதல்வர் என அனைவரும் எதிர்க்கின்றனர் என்றார்.

English summary
West Bengal CM Mamta Banerjee says that Only BJP will remain here&everyone else will be made to leave-it's their politics. India is for everyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X