சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புத்தாண்டு பொறந்தாச்சு.. என்னெல்லாம் செய்யலாம்.. வாங்க பாஸ் பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு என்று வந்தாலே கொண்டாட்டம் தான். ஒரு மாதம் அது ஜாலியா ஓடி விடும்.

கொண்டாட்டம் மட்டுமா கூடவே ஒரு சில தீர்மானங்கள் எடுத்துட்டு விருமாண்டி மாதிரி விறைப்பா நிற்போம். அதை பின்பற்ற ஜனவரி வரை முயற்சி செய்வோம் அப்புறம் காற்றில் போன பலூன் தான் தீர்மானங்கள்.

எங்க நானா சொன்னேன் அப்படியா சொன்னேன் என்று வடிவேல் ஸ்டைலில் சிரிப்போம்.. சரி இந்த வருடம் அப்படி இல்லாமல் சின்ன சின்ன தீர்மானங்கள் எடுத்து பறக்கவிடாம பிடிச்சிக்கோங்க. நாம் எல்லோரும் இந்த புத்தாண்டுல என்னவெல்லாம் தீர்மானங்கள் செய்யலாம் என்று முடிவெடுக்கலாம் என்று சில ஐடியாக்கள் பார்க்கலாம்.

நான் ரொம்ப பிசி

நான் ரொம்ப பிசி

யாரைக் கேட்டாலும் கொஞ்சம் பிஸி என்ற வார்த்தைகள் எல்லாப் பக்கமும் கேட்க முடியும். கொஞ்ச பிஸி அதனால ஊருக்கு வர முடியவில்லை. கொஞ்சம் பிஸி அதனால உன்கிட்ட பேச முடியவில்லை என்று சொல்லி சொல்லி தொலைந்து போன நண்பர்களை தேடி எடுக்கலாம். ஒரு மணி நேரம் அரட்டை அடிக்க நேரம் இல்லாவிட்டால் கூட ஒரு ஐந்து நிமிஷ அலல்து இரண்டு நிமிட சம்பாஷணைகள் பிரியமானவர்களோடும் நண்பர்களோடும் என்று வாழ்க்கையை வைத்து கொண்டால் உங்க ஆயுசு கெட்டி தாங்க.

சிஸ்டம் சரி இல்லை

சிஸ்டம் சரி இல்லை

இந்த இந்தியாவே இப்படி தான். நம்ம தமிழ்நாடு எல்லாம் இனி அவ்வளவு தான். ஆட்சில இருக்கிறவங்க என்ன பண்றாங்க . இந்த ஊரில் என்ன தான் ஒழுங்கா நடக்குது என்று கை கொட்டி சிரிப்பதை விட்டுவிட்டு நம்ம பக்கத்தில இருக்கிற சின்ன சின்ன குறைகளை நிவர்த்தி பண்ண என்ன செய்யலாம் நாம எப்படி கை கொடுக்கலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கலாம். நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய் அப்படிங்கிற சின்ன சிந்தனை வந்தாலே போதும்.

ஒரே ஒரு மரம் வளர்ப்போம்

ஒரே ஒரு மரம் வளர்ப்போம்

நமக்கு சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வச்சுக்க முயற்சிப்போம். நிறைய மரங்களை வெட்டி விட்டு ஒரே சூடாக இருக்கு என்று புலம்புகிறோம். முடிந்தால் இந்த வருடத்தில் ஒரே ஒரு மரம் வளர்ப்போம். அபார்ட்மெண்ட் ல எங்க செடி வளர்க்க அப்படி இப்படி என்று சொல்பவர் என்றால் உங்க வீட்டு பால்கனி அல்லது மொட்டை மாடியில் அழகான செடிகள் அதுவும் காய்கறி செடிகள் எல்லாம் வைக்கலாம். முயற்சி பண்ணிப் பாருங்க, சூப்பராக இருக்கும்.

கைகளை சுருக்கி :

கைகளை சுருக்கி :

வாரி வாரி வழங்கிய வள்ளல் பாரி பரம்பரையில் வந்த நாம எல்லோரும் இப்போது அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைல சுருங்கி வாழ பழகிகிட்ட மாதிரி கொடுக்கிற பழக்கத்தை மறந்து கைகளை சுருக்கி வச்சிட்டோம். பெத்த அம்மா அப்பாவுக்கு கொடுக்கவே யோசிக்கிற தலைமுறை அதிகரிச்சிட்டிருக்கு. கொஞ்சம் கைகளை விரிக்கப் பழகலாம். கோவிலுக்கு போகிறது போல அப்பப்ப போக இன்னும் சில கோவில்கள் இருக்கு. ஆதரவற்றோர் ஆசிரமம், முதியோர் இல்லம் என்று இன்னும் சில கோவில்கள் இருக்கு . தரிசிக்க அம்மா முகம் அப்பா முகம் என்று சாமிகள் ஊரில் இருக்கு.

மாய வலை

மாய வலை

எங்கயாவது டீல் இருக்கா டீல் இருக்கா என்று தேடி தேடி ஆன்லைன் ஷாப்பிங் அப்படிங்கிற மாய வலைக்குள் மாட்டி இருப்பது நமக்கு தெரியாமலே நமக்கு தேவை இல்லாத பொருட்களை வாங்கி வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறோம். நான் படித்ததில் சிறந்த டிப் என்னன்னா உங்களுக்கு என்ன வாங்க தோன்றுகிறதோ அதை ரெண்டு மாசம் அல்லது ரெண்டு வாரம் தள்ளி போட்டு பாருங்க. அப்புறம் புரிஞ்சிடும் அது தேவையா தேவை இல்லையா என்று. அதுவும் கூட மனிதர்களை முகத்துக்கு நேர் பார்த்து கதை பேசி முடிந்த வரை அருகில் இருக்கும் கடைகளில் போய் வாங்குவது நல்லது .

சாப்பாடை பார்த்து சாப்பிடலாமே :

சாப்பாடை பார்த்து சாப்பிடலாமே :

வாழை இலையில் வரிசையாய் அடுக்கி வைத்து தரையில் அமர்ந்து சம்மணம் இட்டு சாப்பாட்டை பார்த்து ரசித்து சாப்பிட்ட தமிழர்கள் நாம். இப்போ என்ன சாப்புடுகிறோம் என்று தெரியாமலே விழுங்கி கொண்டிருக்கிறோம். அப்போது மாதிரி வீட்டில் வகை வகையாய் உணவு இல்லை.வகை வகையாய் டிவி ப்ரொக்ராம்ஸ் பார்த்துட்டு சீரியல் பார்த்துட்டு உச்சு கொட்டிட்டு விழுங்கிக்கிட்டு இருக்கிறோம் .வலது கை சோறு சாப்பிட இடது கை ஒரு மொபைலை நோண்டி கொண்டிருக்கிறது. இப்படி தான் பல பேரின் சாப்பாட்டு நேரம் போயிட்டு இருக்கிறது. இந்த புது வருடத்திலாவது சாப்பாடை பார்த்து சாப்பிட முயற்சி பண்ணலாமே பாஸ். சாப்புட்டு முடிச்சிட்டு நல்லா சாய்ந்து உட்கார்ந்து பார்க்கலாம். காலை மறைக்கிற தொப்பையை கரைக்க விழுந்து விழுந்து உடற்பயிற்சி செய்யாவிட்டால் கூட நல்ல காற்றுக்காக நல்ல ஆரோகியமான வாழ்க்கைக்காக காலையிலோ மாலையிலோ சின்னதாய் ஒரு வாக்கிங் போகலாம்.

முகநூல் தொலைந்த முகங்கள்:

முகநூல் தொலைந்த முகங்கள்:

அலைபேசி வாட்ஸாப் ட்விட்டர் முகநூல் என்று இணையத்துக்கு ஒரு நாளில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று தினமும் செலவிடுகிறோம்.ஆனால் அந்த நேரத்தில் என்ன செய்கிறோம் என்று யோசித்து பார்த்தால் நம் நண்பர்களுக்கு பிடித்த விஷயத்தை பார்த்து அதற்கு ஒரு லைக் அப்படியே scroll பண்ணி பண்ணி பொழுதை கழிக்கிறோம். அதே நேரத்தில் நமக்கு பிடித்ததை இணையத்தில் தேடலாம். கூகுளை விக்கிப்பீடியாவை விசிட் அடிக்கலாம்.தெரிந்து கொள்ள கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயம் இருக்கு. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொலைத்துவிட்ட நாம் இணையத்தில் எத்தனையோ புத்தகங்கள் இருக்கு அதை பிரீ டைமில் வாசிக்கலாம்.

பக்கத்தில் இருக்கும் முகங்களை பார்த்து :

பக்கத்தில் இருக்கும் முகங்களை பார்த்து :

முகநூல் நண்பர்களை பார்த்தும் வாட்ஸாப்ப் ஸ்மைலிகள் பார்த்து சிரிக்கும் நேரத்திலே வீட்டில் பக்கத்தில் இருக்கும் முகங்களை பார்த்து கொஞ்சம் சிரிக்க பழகலாம். அது மனைவியாக இருக்கலாம் அம்மாவாக இருக்கலாம் பக்கத்து வீட்டில் இருக்கும் நண்பனாக இருக்கலாம் அல்லது புதிதாக எதிர்த்த வீட்டில் குடிவந்தவர்களாக இருக்கலாம். அப்புறம் முக்கியமாக தூங்கும் அறையில் தொலைபேசியை கட்டிக்கொண்டு தூங்காமல் வெளிய வச்சுக்கிட்டு போகலாம். அதுவும் கதிர்வீச்சு இருக்கு என்று தெரிந்தும் தலையணை பக்கத்திலேயே உறங்குகிறது அலைபேசி. மொபைலில் தான் அலாரம் வைக்கணும் என்று இல்லையே சாதாரண அலாரத்தை தேடி எடுக்கலாமே. அலைபேசியோடு இரவை நீளமாக்காமல் அருகில் இருப்பவர்களோடு நிம்மதியாய் கதைகள் பேசி முடித்த மலர்ச்சியோடு நல்லா தூங்கி எழும்பினால் அடுத்த நாள் மூளை உற்சாகமாக வேலை செய்யும்.


இதை எல்லாம் நீங்க ஏற்கனவே செஞ்சுக்கிட்டு இருந்தா நீங்க சூப்பர் பாஸ் . இல்லாவிட்டால் செய்ய முயற்சிக்கலாம். சின்ன சின்ன பழக்க வழக்க மாற்றங்கள் நம்மை நமக்கே தெரியாமல் வெற்றி பாதைக்கு இழுத்து செல்லும் அமைதியான வாழ்க்கைக்கு வழிகோலும். இந்த ஆண்டு அழகான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

- Inkpena சஹாயா

English summary
Resolutions are the part and parcel of every New year, here are some tips for you from Inkpena Sahaya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X