சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த 3 விஷயங்கள்.. சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்தது என்ன தெரியுமா? சாம்பியன் ஆனது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி அபாரமாக வென்று 2023 ஐபிஎல் சாம்பியன் ஆகி உள்ளது.

2023 ஐபிஎல் சீசன் திருவிழா போல நடந்து முடிந்துள்ளது. பல திருப்பங்களுடன், எதிர்பாராத வெற்றி தோல்விகளுடன் இந்த சீசன் நடந்து முடிந்துள்ளது. 2023 ஐபிஎல் சீசன் சாதாரண ஐபிஎல் என்பதை தாண்டி சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஸ்பெஷல் ஐபிஎல் என்றுதான் கூற வேண்டும்.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்று கருதப்படுவதால் இந்த சீசன் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று முதல்நாள் நடக்க வேண்டிய ஆட்டம் மழை காரணமாக நடக்கவில்லை. தொடர்ந்து அகமதாபாத் மைதானத்தில் பெய்த மழை காரணமாக நேற்று முதல்நாள் மேட்ச் நடக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மேட்ச் மழைக்கு இடையே விட்டு விட்டு ஆட்டம் நடந்தது.

What are the 3 reasons behind the win of the CSK IPL final against Gujarat Titans?

குஜராத் அணி பேட்டிங்:

பல திருப்பங்களுடன் நடந்த இந்த போட்டியில் நேற்று சாய் சுதர்ஷன், சாகா ஆகியோர் குஜராத் அணிக்காக ஆடிய விதம் சிஎஸ்கே அணியை அதிர வைத்தது. சிஎஸ்கே டாஸ் வெல்ல குஜராத் முதலில் பேட்டிங் செய்தது.

39 பந்துகள் பிடித்த சாகா 54 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்தார், ஆனால் அதிரடி குறையாமல் ஆடிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 96 ரன்களை 47 பந்துகளில் எடுத்தார். 8 சிக்ஸ், 6 பவுண்டரி என்று சிஎஸ்கே அணியை இவர் புரட்டி எடுத்தார்.

இவரின் ஆட்டம்தான் சிஎஸ்கே அணிக்கு எதிராக மாறியது. கடைசியில் ஹர்திக் பாண்டியாவும் 12 பந்தில் 21 ரன்கள் எடுக்க குஜராத் அணி 20 ஓவரில் 214-4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்து சிஎஸ்கே அணி வெற்றிபெறுமா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது.

மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக ஆட்டமும் சுருக்கப்பட்டது. 20 ஓவரில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்று டிஎல்எஸ் முறையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்து திரில் வெற்றிபெற்றது. சிஎஸ்கே அணியின் இந்த வெற்றிக்கு பின்வரும் விஷயங்கள் முக்கிய காரணமாக அமைந்தன.

காரணம் 1 :

சுப்மான் கில் விக்கெட் போகவில்லை என்றால் குஜராத் இன்னும் அதிக ரன்களை எடுத்து இருக்கும். இறுதிப்போட்டிக்கு முன் கடந்த நான்கு ஆட்டங்களில் மூன்று சதங்கள் அடித்து ஃபார்மில் உள்ள வீரராக ஷுப்மான் கில் இறுதிப் போட்டிக்கு வந்ததால்.. அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கில் தொடக்க ஆட்டக்காரர் 2023 சீசன் முழுவதும் மிக சிறப்பான வீரராக தனித்து தெரிந்தார்.

ஐபிஎல் 2023 இல் 900 ரன்களுக்கு அருகில் வந்து கிட்டத்தட்ட கோலியின் ரெக்கார்டை காலி செய்து விடுவாரோ என்று அச்சத்தை கொடுத்தார். ஆனால் அவரை நேற்று ஜடேஜா பந்தில் தோனி செய்த ஸ்டம்பிங் ஆட்டத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

What are the 3 reasons behind the win of the CSK IPL final against Gujarat Titans?

காரணம் 2 - ருதுராஜுடன் முதல் விக்கெட்டுக்கு கான்வே ஆடிய விதம் பெரிய அளவில் கவனம் பெற்றது. 25 பந்தில் 47 ரன்கள் எடுத்திருந்த தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயின் அட்டகாசமான தொடக்கம் இல்லையென்றால் சிஎஸ்கே இறுதி ஓவர்களில் சிரமப்பட்டு இருக்கும். ஒரு ஓவருக்கு 12 ரன்கள் என்ற ஆஸ்கிங் ரேட் இருந்த போதிலும் கூட, பிரஷரை ஏற்றுக்கொள்ளாமல் கான்வே அதிரடியாக ஆடினார். நேற்று ஜடேஜா அதிரடியில் இவரின் முக்கியமான ஆட்டம் கவனிக்கப்படாமல் போய்விட்டது.

காரணம் 3 - ஜடேஜா - துபே இருவரின் ஆட்டமும் நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இருப்பினும், ஜடேஜா ( 6 பந்தில் 15 ) மற்றும் சிவம் துபே ( 21 பந்தில் 32* ) எடுத்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது ஜடேஜா நிதானமாக ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசியது இரண்டும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தன.

English summary
What are the 3 reasons behind the win of the CSK IPL final against Gujarat Titans?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X