சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக அரசியலின் மாற்று முகமாக மாறுவாரா தினகரன்.. அல்லது ஏமாற்றுவாரா?

டிடிவி தினகரனின் தேர்தல் நிலைப்பாடு இதுவரை தெரியவில்லை.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக, அதிமுகவுக்கு இணையாக ஒரு மாற்றை உருவாக்க கூடிய முக்கிய பொறுப்பு டிடிவி தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.

தினகரனுக்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. முதல்முறையாக எல்லா தொகுதிகளிலும் அமமுக போட்டியிட போகிறது. இடைத்தேர்தல் நடக்க போகிறது என்பதற்காக திருப்பரங்குன்றம், திருவாரூரில் செய்து வந்த எல்லா கள பணிகளையும் ரெட் அலர்ட் அரசியல் சிதைத்துவிடவே அப்செட் ஆனார்.

பிறகு 18 எம்எல்ஏக்கள் வழக்கில் மொத்தமாக புரட்டி போட்டுவிட்டது. எல்லாவற்றிலும் அடி மேல் அடி வாங்கி வரும் நிலையில், இதையெல்லாம் சமாளித்துதான் மீண்டும் எழுந்து அடுத்த கட்டத்துக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் டிடிவி.

 பாஜகவுக்கு ஆகாது

பாஜகவுக்கு ஆகாது

இப்போதைக்கு திமுக, அதிமுக இரண்டும் பெரிய கட்சி என்றால் அதற்கு மாற்றாக ஒரு சக்தியாக உருவாக டிடிவி திட்டமிடுவதாக கூறப்படுகிறது. பாஜகவுக்கு டிடிவியை சுத்தமாக ஆகாது. அதனால் இருப்பது பாமக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், போன்றவைதான்.

 மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

இவற்றில் கமலின் அரசியல் டிடிவிக்கு பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். கமலின் பேச்சு, செயல்பாடுகள், கட்சியின் வளர்ச்சி எல்லாவற்றையும் டிடிவி கவனித்து வரவே செய்வதால் கமல் ஆப்ஷனில் இருக்கிறார்.

 திமுக புறக்கணிப்பு

திமுக புறக்கணிப்பு

அடுத்ததாக இருப்பது விடுதலை சிறுத்தைகள், பாமகதான். தற்போது திமுக விடுதலை சிறுத்தையை தவிக்க விட்டு வரும் சூழலில் அவர்களை சேர்த்து கொள்ளலாம் என டிடிவி கணக்கு போடுகிறார். அதேபோல டிடிவியுடன் இணைய பாமகவும் முயல்வதாக கூறப்படுகிறது. ஏனெனில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம் என்று அன்புமணி அறிவித்துவிட்டதாலும், திமுக தன்னை புறக்கணிப்பதை புரிந்து கொண்டதாலும் டிடிவியுடன் இணைய பாமக தரப்பில் ஆர்வம் காட்டப்படுகிறது.

 விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள்

அதேபோல வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் ஆதரவை இழக்கவும் டிடிவி விரும்பவில்லை. ஆனால் ஏற்கனவே விடுதலை சிறுத்தைக்கும், பாமகவுக்கும் கசமுசா உள்ளதால், இருவருமே தன்னுடன் இணைந்து வருவார்களா என்ற கேள்வியும் டிடிவிக்கு எழவே செய்கிறது.

 முதல்வர் ஆசை

முதல்வர் ஆசை

பாமக, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் என்று ஒன்றிணைத்தாலும், இதில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பஞ்சாயத்து இருக்கிறது. அன்புமணிக்கும் முதல்வர் ஆசைதான், கமலுக்கும் முதல்வர் ஆசைதான், டிடிவிக்கும் முதல்வர் ஆசைதான். ஆக இதையெல்லாம் தாண்டி இவர்கள் ஓரணியில் இணைந்தால் மக்கள் எப்படி அதை எடுப்பார்கள் என்பது இன்னொரு கேள்வியாகும்... பார்க்கலாம்.

English summary
TTV Dinakaran's Idea of the Allaince is not yet known. But He has been forced to succeed in this election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X