சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரெம்டெசிவிர் மருந்து.. கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஷேர் செய்த முக்கியமான விஷயம்!

Google Oneindia Tamil News

சென்னை: ரெம்டெசிவிர் மருந்து வாங்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஷேர் செய்துள்ளார். பொதுமக்களின் உபயோகத்திற்காக அவர் ஷேர் செய்த விஷயம் என்னவென்பதை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், சென்னையில் மட்டுமின்றி இன்று முதல் கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சியிலும் 'ரெம்டெசிவிர்' ஊசி மருந்து விற்பனை தொடங்கி உள்ளது.

கல்வி டிவி, அண்ணா நூலகத்தில் அதிரடி ஆய்வு.. முதல் நாளிலேயே சபாஷ் வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்கல்வி டிவி, அண்ணா நூலகத்தில் அதிரடி ஆய்வு.. முதல் நாளிலேயே சபாஷ் வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில் "100 எம்ஜி ரெம்டெசிவிர் (1 வயல்) மருந்து ரூ.1,568 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 6 வயல்களைப் பெற்றுக்கொள்ளலாம். மருந்து வாங்க வேண்டுமெனில் கொரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) செய்துகொண்டதற்கான சான்று, சி.டி.ஸ்கேன் பரிசோதனை சான்று, மருத்துவரின் பரிந்துரை (அசல்), நோயாளியின் ஆதார் அட்டை அசல், நகல், மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அட்டை அசல், நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விற்பனை மையம் செயல்படும். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

ஆவணங்கள் என்ன

ஆவணங்கள் என்ன

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைக்காக பல்வேறு பதிவுகளை கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஷேர் செய்து வருகிறார்.. அந்த வகையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து பதிவிட்டுள்ளார் . அந்த பதிவில் கூறியிருந்த விஷயங்களை இப்போது பார்ப்போம். மருத்துவரின் பரிந்துரை சீட்டு (அசல்) (மருத்துவமனையின் தன் முகவிரியிட்ட தாளில் அன்று / முந்தைய நாள் தேதியில்). இருக்க வேண்டும்.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை


நோயாளிகளின் ஆர்டிபிசிஆர் அறிக்கை (அசல் மற்றும் நகல்) கொண்டுவர வேண்டும். நோயாளியின் சிடி ஸ்கேன் அறிக்கையும் இருக்க வேண்டும். நோயாளியின் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் இருக்க வேண்டும். நோயாளிகளுக்காக மருந்து வாங்குவோரின் ஆதார் அட்டை (அசல்ல மற்றும் நகல்)அவசியம் ஆகும். இந்த ஆணவங்களுடன் சென்றால் ரெம்டெசிவிர் மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

ஒருவருக்கு எவ்வளவு

ஒருவருக்கு எவ்வளவு

குறிப்பு: அதிகபட்சமாக 6 எண்ணிக்கை மட்டுமே ஒருவருக்கு விற்கப்படும். ஒரு பாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.1568 ஆகும், ஆறுபாட்டில் ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.8408 ஆகும்" அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

பரிசோதனை மருந்து

பரிசோதனை மருந்து

ரெம்டெசிவிர் மருந்துப் பயன்பாடு குறித்து மருத்துவர்கள் கூறும்போது, "ரெம்டெசிவிர் என்பது கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த அவசர காலத்துக்கு மட்டும் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள, பரிசோதனை அளவிலான மருந்துதான். இது, கொரோனா தொற்றிலிருந்து உயிர் காக்கும் மருந்தாக இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை.

ரெம்டெசிவிர் யாருக்கு அவசியம்

ரெம்டெசிவிர் யாருக்கு அவசியம்

தீவிரமல்லாத, சாதாரண பாதிப்பு உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக, தேவைப்படும் இன்னொருவரது வாய்ப்பைப் பறிப்பதற்கு சமம் ஆகும். ம்டெசிவிர் மருந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவையில் உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மருந்தை வீட்டில் பயன்படுத்தவோ, பதுக்கி வைக்கவோ கூடாது" என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்

English summary
Actress shruti haasan , daughter of Kamalhaasan, has shared what are the documents required to buy remdesivir . Let us now see what he has shared for the use of the public.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X