• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவு ஒழித்தல்.. எல்லாம் இனி டெக்னாலஜிதான்.. ஸ்டாலின் அசத்தல்

|

சென்னை: தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல 7 உறுதிமொழிகளையும் அதன் இலக்குகளையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் பொதுக்கூட்டம் திருச்சியில் சிறுகனூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை ஸ்டாலின் வெளியிட்டார்.

அவர் கூறுகையில் பொருளாதாரம், வேளாண்மை, நீர் வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நக்ரப்புற வளர்ச்சி, ஊரக உட்கமைப்பு, சமூக நீதி ஆகிய அனைத்தும் முக்கியமானவை. இவற்றை அடைய 7 இலக்குகளும் உள்ளன. அவற்றை காண்போம்.

What are the promises introduced by MK Stalin?

1. வளரும் வாய்ப்புகள் வளமான தமிழகம்

ரூபாய் 35 லட்சம் கோடியைத் தாண்டும் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி.

தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ 4 லட்சத்துக்கும் மேலாக உயர்த்துதல்

ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாகக் குறைத்தல்

கொடும் வறுமையில் வாடும் 1 கோடி பேரை மீட்டெடுத்து வறுமைக் கோட்டுக்குக் கீழ் ஒருவரும் இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை முன்னெடுத்தல்

2. மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி

தமிழகத்தில் நிகர பயிரிடு பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து இதனை 75 விழுக்காடாக உயர்த்துதல்.

தமிழ்நாட்டில் இப்போது இருபோக நிலங்களாக 10 லட்சம் ஹெக்டேர் உள்ளது. இதனை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துதல்.

உணவு, தானியங்கள் மற்றும் தேங்காய், கரும்பு, பருத்தி, சூரியகாந்தி ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத் திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெறச் செய்தல்.

3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்

தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சம் லிட்டராக உயர்த்துதல்

நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைத்தல்

மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்துதல்

பசுமைப் பரப்பளவை 20.27 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு 7.5 லட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கூடுதலாக இணைத்தல்

கலைஞர் சாகவில்லை, உயிரோடு இருக்கிறார்.. ஸ்டாலினின் 7 உறுதிமொழிகளால் துரைமுருகன் ஆனந்த கண்ணீர்

4. அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம்

கல்வி (1.9 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் வரை) மற்றும் சுகாதாரத்திற்காக (0.75 சதவீதத்திலிருந்து 2 சதவீதம்) மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து செலவிடப்படும் நிதியளவை மூன்று மடங்கு உயர்த்துதல்.

கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெறச் செய்தல் (தற்போது 17ஆவது இடம்).

பள்ளிக் கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை 10 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைத்தல்.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் அமைத்தல்

மருத்துவர்கள்- செவிலியர்கள்- துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழிற்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இரட்டித்தல்.

5. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்குதல்

பட்டியலினத்தவர்- பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித் தொகையை இரு மடங்கு உயர்த்தி வழங்குதல்

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவை முற்றிலுமாக ஒழித்தல்

7 முக்கிய துறைகளை சீரமைத்தால் தமிழகம் தலைநிமரும்- உறுதிமொழியை வெளியிட்ட ஸ்டாலின்

6. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்

கூடுதலாக 3 லட்சம் வீடுகளுக்குக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவை 35 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்துதல்

அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பைச் செயலுறச் செய்தல்.

புதிதாக 9.75 லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருவதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவை 16.6 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழாக குறைத்தல்.

நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில் தமிழகத்தில் இருந்து 15 மாநகரங்களை இடம்பெறச் செய்தல் (தற்போது 11 உள்ளன).

7. உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் இப்போது 57 சதவீதம் கான்கிரீட் வீடுகள் உள்ளன. 20 லட்சம் கான்கிரீட் வீடுகளைப் புதிதாகக் கட்டித் தந்து இதனை 85 சதவீதத்திற்கு உயர்த்துதல்.

கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குதல்

எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத சாலை இணைப்புகளையும் வடிகால் அமைப்புகளையும் கட்டமைத்தல்

எல்லா கிராமங்களிலும் அலைக்கற்றை இணைய வசதி ஏற்படுத்துதல்

குறைந்தபட்சம் 50 சதவீதம் கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச் செயலுறச் செய்தல்.

 
 
 
English summary
DMK President MK Stalin introduces 7 promises. What are they?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X