• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"மாஸ்டர் பிளான்".. எகிறி குதிக்கும் பாஜக.. "5 மாதத்தில் 5 விக்கெட்".. கரையும் கதர் கட்சி.. ஒரே வழி?

Google Oneindia Tamil News

சென்னை: ஒருபக்கம் உட்கட்சி பூசல் அதிகமாகி வரும் நிலையில், நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியும் கரைந்து கொண்டிருப்பது அந்த தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சிக்கு 2 வருடமாக தலைவர் யாருமே இல்லை.. ஒரு தேசிய கட்சி தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது பெருத்த பலவீனமானதும்கூட..

சோனியா காந்திக்கு உடம்பு சரியில்லாத நிலையில், ராகுலும் பொறுப்பேற்காத நிலையில், இது சம்பந்தமாக கடிதம் எழுதி அதிருப்திக்கு உள்ளான 23 பேர்களை சமாதானப்படுத்த முடியாத நிலையில், வேறு தலைவர்களும் நியமனம் செய்ய முடியாத நிலையில், காங்கிரஸ் தள்ளாடி கொண்டிருக்கிறது.

 தனி ஆளாக கெத்து காட்டும் இம்ரான் கான்! ஸ்தமித்துபோன இஸ்லாமாபாத்.. களமிறங்கிய ராணுவம்! என்ன நடக்கிறது தனி ஆளாக கெத்து காட்டும் இம்ரான் கான்! ஸ்தமித்துபோன இஸ்லாமாபாத்.. களமிறங்கிய ராணுவம்! என்ன நடக்கிறது

சீனியர் லீடர்

சீனியர் லீடர்

அதிலும் கபில்சிபலையும் சமாதானப்படுத்தாமல் விட்டதுதான் பெருத்த அதிர்ச்சியாக உள்ளது.. காரணம், அந்த அதிருப்தியாளர்களின் குழுவின், மிக முக்கிய முகமே கபில் சிபல் தான்... முதன்முதலில் அப்செட்டாகி, மற்ற மூத்த தலைவர்களையும் தன் வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை மேற்கொண்டவார கபில்சிபல்தான்.. இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் வலுவான எதிர்ப்பை காட்டியிருந்தபோதும்கூட, காங்கிரஸில்தான் இருந்தாரே தவிர, கட்சியை விட்டு போகவில்லை..

சமாஜ்வாதி

சமாஜ்வாதி

அதேசமயம், ராஜ்யசபா எம்பி தேர்தல் குறித்த தன்னுடைய கவனத்தையும் திருப்பினார்.. காங்கிரஸை நம்பினால் கடைசிவரை எதுவுமே கிடைக்காது என்று உறுதியாக நம்பியதால், மாற்று கட்சி பற்றி யோசித்தார்.. ஏற்கனவே சமாஜ்வாதி ஆதரவுடன்தான் எம்பி பதவியை பெற்ற நிலையில், மீண்டும் சமாஜ்வாதி கட்சி பக்கமே தாவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பலவீனம்

பலவீனம்

"காங்கிரஸ் கட்சி தனது செயல்பாடுகளால் பலவீனமாகி வருகிறது என்பதே தற்போது நடந்து வரும் நிதர்சனம், அதனால், கட்சியை வலுப்படுத்துவதே எங்களது நோக்கம்'' என்று மீடியாக்களில் சொல்லி வந்தவர், அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்... அத்துடன், சமாஜ்வாதி கட்சி ஆதரவுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுவும் தாக்கல் செய்திருக்கிறார் என்றால், காங்கிரஸ் இதை பரிசீலிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி உள்ளது.

மேலிடம்

மேலிடம்

அப்படியானால் கபில் சிபல் வெளியேற்றத்தினால் காங்கிரஸ் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதா என்று பார்த்தால், இல்லை என்றே தெரிகிறது.. கட்சிக்குள் இருந்து எத்தனை பேருக்குதான் எம்பி சீட் வாங்க தர முடியும்? அவரவர் வெளியேறினால் சரிதான் என்ற மனநிலைமைக்கே மேலிடம் வந்துவிட்டதாக தெரிகிறது.. எனினும், கபில்சிபலை அக்கட்சி நழுவ விட்டிருக்க கூடாது என்றே பரவலான கருத்துக்கள் உள்ளன.

பின்னடைவு?

பின்னடைவு?

இந்த 5 மாதங்களில் மட்டும், சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், அஸ்வினி குமார், ஆர்.பி.என்.சிங் மற்றும் கபில் சிபல் என, முக்கிய தலைவர்கள் 5 பேரும் விலகி உள்ளது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது... மேலும், 2024-ம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக ஏற்கனவே தயாராகி வரும் நிலையில், காங்கிரஸ் இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கி உள்ளது... காங்கிரஸ் தலைமை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளதுதான் இதற்கெல்லாம் காரணமாக அமைந்து வருவதாக கூறப்படுகிறது..

மாஸ்டர் பிளான்கள்

மாஸ்டர் பிளான்கள்

இதன் விளைவு, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் கட்சிக்கு தலைவர்கள் இல்லாத பரிதாப நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் கடைசித் தொண்டன் இருக்கும் வரை, கோஷ்ப்பூசல் இப்படியே இருந்துகொண்டுதான் இருக்கும் என்ற வரலாற்று விமர்சனமும் பலமாகி உள்ளது.. ஏற்கனவே, உட்கட்சி கோஷ்டிப்பூசல்களால்தான், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் எனப் பல மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சியை இழந்தது.. இப்போது பஞ்சாப்பிலும் ஊசலாட்டம்தான்..

சரவெடி பாஜக

சரவெடி பாஜக

எனவே, வெகுஜன அடித்தளத்துடன் கூடிய அதன் தலைவர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.அதுமட்டுமல்ல, காங்கிரஸில் நடந்து கொண்டிருப்பது அத்தனையும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்து வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் நடக்க உள்ளநிலையில், பாஜகவின் மாஸ்டர் பிளான்கள் ஆரம்பமாகி உள்ள நிலையில், காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி உள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

English summary
What are the reasons for the weakening of the Congress party and What is Rahul gandhi going to do காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருவது தொண்டர்களுக்கு சோர்வை தருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X