சென்னை திமுகவிற்கு, தூத்துக்குடி யாருக்கு? லயோலா மாஜி மாணவர்கள் பரபர சர்வே
Recommended Video
சென்னை: தமிழகத்தில் எந்தெந்த லோக்சபா தொகுதிகளில் எந்தெந்த கட்சி வெல்லப்போகிறது என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம்
சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
லயோலா முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பில் லோக்சபா, சட்டசபை இடைத் தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி இதுகுறித்த முடிவுகளை இன்று சென்னையில் நிருபர்களிடம் பண்பாட்டு மக்கள் தொடர்பகம், நிர்வாகி திருநாவுக்கரசு தெரிவித்தார்.
16 நாட்களாக 40 தொகுதிகளிலும் கள ஆய்வு செய்து, மொத்தம், 21,464 பேரிடம் நேரடியாக கருத்துக் கேட்டு ரிசல்ட் கொடுத்துள்ளோம்.
சென்னை திமுக கோட்டை
இதன்படி, திருவள்ளூர் தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிக வாக்கு வித்தியாசம் கிடையாது. திமுக கூட்டணி அதிமுக கூட்டணியைவிட 1 சதவீத வாக்கு மட்டுமே முன்னணியில் உள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம் தொகுதிகளில் திமுகதான் வெற்றிபெறப்போகிறது.
தமிழகத்தில் திமுக அலை.. லோக்சபா தேர்தலில் 33, இடைத் தேர்தல்களில் 11 தொகுதிகளை அள்ளும்! அதிரடி சர்வே
வேலூரில் இழுபறி
வேலூரில் இழுபறி நீடிக்கிறது. அங்குள்ள மக்கள், திமுக கட்சியை சேர்ந்தவர்களே வாக்களிக்க தயங்குவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது. எனவே அங்கு இழுபறிதான். கிருஷ்ணகிரி, தருமபுரி (அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தொகுதி), திருவண்ணாமலை திமுக வெற்றி, ஆரணி காங்கிரஸ் வெற்றி, விழுப்புரம் இழுபறி நிலையில் உள்ளது.
லோக்சபா தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.. இது மக்களின் கருத்து கணிப்பு!
கோவை பாஜக
சேலம், கள்ளக்குறிச்சியில் திமுக வெற்றி பெறும். நாமக்கல்லில் திமுக கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வெற்றி பெறும். ஈரோடு மதிமுக, திருப்பூர் இழுபறி, நீலகிரி திமுக, கோவை பாஜக வெற்றி, பொள்ளாச்சி திமுக, திண்டுக்கல் திமுக, கரூர் காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
திருச்சி அமமுகவிற்கு
திருச்சியில் அமமுக வெற்றிபெறும், பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி, கடலூரில் திமுக வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது. மயிலாடுதுறையில் அதிமுக, நாகப்பட்டினம் இழுபறி, தஞ்சையில் திமுக வெற்றி, சிவகங்கை காங்கிரஸ் (கார்த்தி சிதம்பரம்) வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
பாஜகவிற்கு கஷ்டம்.. காங்கிரஸ் நிலை என்ன தெரியுமா?.. அசத்தல் சர்வே இதோ!
மதுரை, கன்னியாகுமரி
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும். தேனியில் அமமுக வெற்றி பெறும். விருதுநகர் காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. ராமநாதபுரத்தில் இழுபறி நிலை நிலவுகிறது. தூத்துக்குடியில் திமுக (கனிமொழி) வெற்றி. தென்காசியில் இழுபறி. திருநெல்வேலியில் அதிமுக வெற்றி பெறும். கன்னியாகுமரி, புதுச்சேரியில் காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.