சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இருக்கு ஆனா இல்லை.. அமித்ஷா போட்ட போடு.. "அவங்க" வந்தால் என்ன?.. மிரளும் கட்சிகள்!

அமமுக அதிமுக இணைப்பு சாத்தியமா என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: "இருக்கு, ஆனா இல்லை.." இப்படித்தான் பாஜக - அமமுக உறவை சொல்ல வேண்டி இருக்கிறது.. இப்போது வரை சசிகலாவுடன் பாஜக எந்தவித மனநிலையில் உள்ளது? என்ன முடிவில் இருக்கிறது? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

Recommended Video

    #TNElection2021 அமமுகவுக்கு தொகுதி உள்ஒதுக்கீடு…? அதிமுகவை கலவரமாக்கும் அமித் ஷா!

    தேர்தல் தேதி குறிக்கப்பட்டுவிடவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் மும்முரமாகி வருகின்றன.. எனினும் திமுக, அதிமுக இடையே கூட்டணிகள் ஒருமுடிவுக்கு வரவில்லை. தொடர் இழுபறியிலேயே உள்ளன.

    இதில், அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே உறுதியாகி உள்ளது.. தேமுதிக அதே பிடிவாதத்துடன் இருக்கிறது.. பாஜக ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு வருகிறது.

    திருச்சி மாநாட்டில் தமிழக வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டம் வெளியீடு... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! திருச்சி மாநாட்டில் தமிழக வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டம் வெளியீடு... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

     தேவை

    தேவை

    உண்மையிலேயே ஏன் இந்த இழுபறி? பாஜகவின் தேவை என்ன? அமமுக மீதான அக்கட்சியின் நிலைப்பாடு என்ன? சசிகலா என்ன நினைக்கிறார்? டிடிவி தினகரனின் ஐடியா என்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் அனுமானத்தின் பேரில் நம்மிடம் சொன்னதாவது:

    கூட்டணி

    கூட்டணி

    "அமித்ஷா கூட்டணி பேச்சுவார்த்தையை கனகச்சிதமாக நடத்தி வருகிறார்.. பேச்சை ஆரம்பிக்கிறதே 40 சீட் என்றுதான் துவங்கி உள்ளார்.. ஆனால், தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 6 சதவீதம் ஓட்டு வங்கி இருக்கிற பாமகவுக்கே 23 சீட் தான் தந்தோம், பாஜகவுக்கு எப்படி இவ்வளவு சீட் தர முடியும் என்று எடப்பாடி தரப்பில் சொல்லப்பட்டதாம்.

    அதிமுக

    அதிமுக

    இதற்கு பிறகுதான் அமித்ஷா தன்னுடைய வியூகத்தை வேறு மாதிரியாக மாற்றினார்.. தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு இருக்கும் வாக்கு வங்கி பற்றி கேட்டுள்ளார்.. அதற்கு ஓரளவு பதில்களையும், தரவுகளையும் அதிமுக தலைமை தந்தாலும், தென்மாவட்டங்களில் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற உறுதியான உத்தரவாதத்தை தரவில்லை போலும்.. இந்த விஷயத்தைதான் கையில் எடுத்துள்ளார் அமித்ஷா. ஆனால், வேறு தினுசாக பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.

     தென் மாவட்டம்

    தென் மாவட்டம்

    அதற்கு பிறகு, தென்மாவட்டங்களை பற்றியே பேச்சை எடுக்காமல், கொங்கு மண்டலங்களில் தங்களுக்கு போதுமான சீட் ஒதுக்க வேண்டும் என்று அமித்ஷா கேட்டுள்ளதாக தெரிகிறது.. இதுதான் அதிமுகவுக்கு பேரதிர்ச்சியாக இருந்துள்ளது.. வரப்போகும் தேர்தலில் கொங்குவில் அதிமுகவையும், வடமாவட்டங்களில் பாமகவையும் பிரித்து கொண்டு கவனித்து கொள்ளலாம் என்று ஒரு கணக்கு போட்டு கொண்டிருந்த நிலையில், கொங்கு மண்டலத்தின் பிரதான இடங்களை பாஜக கேட்கவும் அதற்கும் அதிமுக தலைமை விழித்துள்ளது.

    அமமுக

    அமமுக

    இந்த இடத்தில்தான் சசிகலா விஷயம் தானாகவே வருகிறது.. அமமுக பற்றின பேச்சு தானாகவே எழுப்பப்படுகிறது.. தென்மாவட்டங்களில் அதிமுகவுக்கு வலு இல்லையென்றால், ஏன் அமமுகவை இணைத்து கொள்ள கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.. இதற்கு அதிமுக தலைமையோ, கடைசி நேரத்தில் அது முடியாது, அதிமுக தொண்டர்களின் மனதையும் மாற்ற முடியாது.. இவ்வளவு காலம் அமமுகவை எதிர்த்துவிட்டு, சசிகலாவுக்கு உள்ளே இடமில்லை என்று ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பேசிவிட்டு, இப்போது அவர்களை உள்ளே கொண்டு வந்தால் மொத்தமாகவே கூட்டணிக்கு பெயர் கெட்டுவிடும் என்று எடுத்து சொல்லப்பட்டுள்ளது.

     திமுக

    திமுக

    ஆனால், இந்த காரணத்தை பாஜக தரப்பு ஏற்கவில்லை என்றே தெரிகிறது.. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், திமுக வெற்றியை டபுள் டிஜிட்டில் அடக்க வேண்டும் என்றால், இந்த சாக்கெல்லாம் சொல்ல முடியாது, அதிமுக சீனியர் அமைச்சர்களான ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கியமானவர்கள், ஏன் அதே தென் மாவட்டங்களில் நின்று போட்டியிடக்கூடாது? அவரவருக்கு சொந்த தொகுதியிலும் நிற்க வேண்டும், கொங்குவையும் எங்களுக்கு தர முடியாது, அமமுகவையும் உள்ளே இணைத்து கொள்ள முடியாது, என இப்படி கறார் காட்டினால் எப்படி? என்பதே பாஜக தலைவர்களின் கேள்வியாக உள்ளது.

     குழப்பம்

    குழப்பம்

    இதனால்தான் இன்றைய தேதி வரை இழுபறி நடக்கிறது.. எப்படியும் 5ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.. அமித்ஷா 7-ம் தேதி வருவார் போல தெரிகிறது, அன்றைய தினம் ஃபைனல் செய்துவிட்டால், அடுத்து 10ம் தேதி நட்டா வருகிறார்... அப்போது எல்லாமே உறுதியாகிவிடும்.. அதுவரை இந்த ஒரு வாரம் குழப்பமும், சந்தேகங்களும் கூட்டணிக்குள் நீடித்துதான் வரும்" என்றனர்

    English summary
    What decision is the BJP going to take regarding AMMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X