கட்சியை பிடிப்பேன்.. சொன்ன செங்கோட்டையன்.. 1 நிமிஷம் கூட தாக்கு பிடிக்க மாட்டீங்க.. சீறிய அமித் ஷா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னால் அதிமுகவை நன்றாக வழிநடத்த முடியும். நான் எடப்பாடியை விட பெட்டர். அவரை விட சிறப்பாக கட்சியை வழிநடத்துவேன் என்று செங்கோட்டையன் அமித் ஷாவிடம் கூறியதாகவும், அதற்கு அமித் ஷா கோபமாக பதில் அளித்ததாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் அமித் ஷா வீட்டுக்கு அவர் சென்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edappadi Palaniswami

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்தார் ஈபிஎஸ்.

மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்

செங்கோட்டையனின் டெல்லி பயணம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் வெளியிட்டு உள்ள வீடியோவில், செங்கோட்டையன் அமித் ஷா சந்திப்பை ஏற்பாடு செய்தது பிஎல் சந்தோஷ், அண்ணாமலை. இந்த சந்திப்பில் செங்கோட்டையன் அமித் ஷாவிடம் "என்னால் அதிமுகவை நன்றாக வழிநடத்த முடியும். நான் எடப்பாடியை விட பெட்டர். அவரை விட சிறப்பாக கட்சியை வழிநடத்துவேன். எடப்பாடிக்கு கடுமையாக எதிர்ப்பு உள்ளது. கட்சிக்கு உள்ளேயே அவருக்கு பிரச்சனை உள்ளது.

அதனால் நான் அதிமுகவை உடைப்பேன். என்னால் உடைக்க முடியாது" என்று செங்கோட்டையன் கூறி உள்ளார். அதற்கு அமித் ஷா.. "உங்களால் ஒருநாள் கூட தாக்கு பிடிக்க முடியாது.. ஒரு நிமிடம் கூட கட்சியை நடத்த முடியாது.. எனக்கு உங்களை பற்றி தெரியும். நீங்கள், உங்கள் பின்னால் உள்ளவர்கள் .. ஓபிஎஸ் போன்றவர்கள் பற்றி எனக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி பலம் என்ன என்றும் எனக்கு தெரியும்.

இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தவர்கள்தான் ஒன்றிணைவோம் வா" என்ற கோஷத்தை முன்னிறுத்தி உள்ளார்கள். இதில் செங்கோட்டையன் சிக்கிக்கொண்டார். பாஜக சித்துவேலையும் இதில் இருப்பதால் பாஜகவின் இந்த கூட்டணியில் எடப்பாடி நீடிப்பது சிக்கலானது. அதிமுக தொடர்ந்து இவர்களுடன் இருப்பது சிக்கலாக இருக்கும். எடப்பாடி உடனே முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதோடு செங்கோட்டையன் மீதும் ஆக்சன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்று கூறி உள்ளார்.

செங்கோட்டையன் குற்றச்சாட்டு

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை நாம் சந்திக்கிறோம். 2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. தேர்தல் நெருங்குகிறது அதனால் விரைவில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்., என்று கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+