• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நம்பி "இவரிடம்" பொறுப்பை கொடுக்கலாம்.. சுகாதாரத் துறை அமைச்சர் பதவிக்கு.. சூப்பர் சாய்ஸ்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய ஊரக சுகாதார திட்டம் முதல் 108 ஆம்புலன்ஸ் வரை மத்திய அமைச்சராக இருந்த போது செயல்படுத்திய அன்புமணி ராமதாஸை, சுகாதாரத் துறை அமைச்சராக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.

  ஏன் Anbumani Ramadoss மீண்டும் Union Health Minister ஆக கூடாது? | Oneindia Tamil

  மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் இடம்பெற தேசிய ஜனநாயக கூட்டணியினர் போட்டி போட்டு வருகிறார்கள். அந்த போட்டி தமிழகத்திலும் நடந்து வருகிறது.

  தன் மகனை அமைச்சராக்க ஓபிஎஸ் பாடுபடுகிறார். மாநிலங்களவை எம்பியாக்கப்பட்டு தமிழ்நாடு சார்பில் ஒரு பாஜக தலைவரை மத்திய அமைச்சராக்க வேண்டும் என தமிழக பாஜக நினைக்கிறது.

  "கொரோனா காலத்தில் பேசாம டாக்டர் அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கிடுங்க.. மிகவும் பொருத்தமானவர்"

  அமைச்சராக்கிடுங்கள்

  அமைச்சராக்கிடுங்கள்

  அதேபோல பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை அமைச்சராக்கிவிடுங்கள் என ஆதரவுக் குரல்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த கொரோனா காலத்தில் அமைச்சராகும் முழு தகுதி அவருக்கு இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இருந்தார். இந்த கால கட்டத்தில் இவர் கொண்டு வந்த திட்டங்கள் இன்றளவும் இவரது புகழை பேசுகிறது.

  ஏழைகள் பயன்

  ஏழைகள் பயன்

  உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் என்ற தேசிய ஊரக சுகாதார இயக்கத்தை 2005 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள், பெண், குழந்தைகளுக்கு மருத்துவ வசதி வழங்குவது. குழந்தை இறப்பு விகிதத்தை ஆயிரத்துக்கு முப்பதாக குறைத்தல், தாய்மை இறப்பு விகிதத்தை குறைத்தல், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகிய பாரம்பரிய மருத்துவ முறைகளை உயிர்ப்பித்தல் போன்றவையே இந்த திட்டத்தின் இலக்காகும்.

  தமிழகம்

  தமிழகம்

  அன்புமணி பதவி வகித்த 5 ஆண்டுகளிலும் அதற்கு பின்னர் 9 ஆண்டுகளிலும் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை வைத்து தமிழகத்தில் அழிவு நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையங்களும் அரசு மருத்துவமனைகளும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றன.

  ஆக்ஸிஜன்

  ஆக்ஸிஜன்

  அதற்கு அடுத்த படியாக 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம். இதுவும் அன்புமணி கொண்டு வந்த மகத்தான திட்டங்களில் ஒன்றாகும். மாரடைப்பு, பிரசவம், விபத்து உள்ளிட்டவை ஏற்பட்டால் 108 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும் வீடு தேடி வரும் வாகனம். இந்த வாகனத்தில் ஆக்ஸிஜன் சப்ளை இருக்கும். இதில் ஒரு மருத்துவ உதவியாளரும் இருப்பார்.

  உயிரிழப்புகள்

  உயிரிழப்புகள்

  இதன் மூலம் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. காரணம் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்படுகிறது. மாரடைப்பு என்றால் முதலுதவி சிகிச்சைகள் உள்ளன. விபத்து என்றாலும் மருத்துவ உதவியாளர் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். இதன் மூலம் தாய் சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதற்கு காரணம் பிரசவ வலி ஏற்பட்டவுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மிகவும் சீக்கிரமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அங்கு 99 சதவீதம் பிரசவங்கள் நடைபெறுவதால்தான்.

  139 கோடி

  139 கோடி

  தமிழகத்தில் 108 சேவை தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் அவசர ஊர்தியில் பிறந்துள்ளதாக ஒரு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சேலத்தில் 139 கோடியில் உள்ள அதி உயர் சிறப்பு மருத்துவமனையும் அன்புமணி கொண்டு வந்ததுதான். தமிழகம் முழுவதும் ஏராளமான தொடர்வண்டித் திட்டங்களையும் தொடர்வண்டி மேம்பாலங்களையும் அமைத்தது பாமகதான்.

  அகலப்பாதை

  அகலப்பாதை

  அது போல் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும் அகலப்பாதைகளாக மாற்றியது பாமகதான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தனது ஆட்சிகாலத்தில் ரூ 150 கோடி நிதியை ஒதுக்கி அடிக்கல் நாட்டியதும் அன்புமணி ராமதாஸ்தான். மக்களுக்கு தீமை அளிக்கும் குட்காவை தடை செய்தது அன்புமணிதான். அது போல் புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையை தன்னாட்சி நிறுவனமாக மாற்றி மேம்படுத்தியவர் அன்புமணி. இதனால் தமிழகத்தில் உள்ள 6 மாவட்ட மக்கள் இந்த உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை இலவசமாக பெறுகிறார்கள்.

  சென்னை

  சென்னை

  சென்னையில் ரூ 100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதி உயர் சிறப்பு மையம், சென்னையில் ரூ 250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருந்து ஆய்வகம், ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம், தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அன்புமணி தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

  எய்ட்ஸ்

  எய்ட்ஸ்

  அத்துடன் தமிழ்நாட்டில் எச்ஐவி, எய்ட்ஸை கட்டுப்படுத்த சிறப்பு திட்டங்கள் செங்கல்பட்டில் ரூ 1000 கோடியில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி பூங்கா , வேலூர், வாலாஜா, சேலம், ஓமலூர், மதுரை மேலூர், கடலூர், தாம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க விபத்துக்கான சிகிச்சை மையங்களையும் அன்புமணி அமைத்துள்ளார்.

  நன்மைகள்

  நன்மைகள்

  பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதித்தவர் அன்புமணி. செங்கல்பட்டில் இவர் தொடங்கி வைத்த தடுப்பூசி உற்பத்தி பூங்காவில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இப்படியாக நல்ல பல திட்டங்களை கொண்டு வந்த அன்புமணி, மத்திய அமைச்சராக்கப்பட்டால் தமிழகத்திற்கு நன்மைகள் கிடைப்பது நிதர்சனம்.

  English summary
  What did Anbumani Ramadoss achieved when he was Union Minister? Here are the full details.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X