சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அது ரொம்ப முக்கியம்.. 17 பேரின் தீவிர ஆலோசனை.. 2 மணி நேரம் நீடித்த மீட்டிங்.. ஓ.பி.எஸ் சொன்னது என்ன?

இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்ற அதிமுக அமைச்சர்கள் மீட்டிங்கில் என்ன விஷ்யங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்ற அதிமுக அமைச்சர்கள் மீட்டிங்கில் என்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் தற்போது 2021 தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது தொடர்பாக கடந்த 2-3 நாட்களாக அதிமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து கருத்துக்களை தெரிவித்து, தமிழக அரசியலில் பூகம்பத்தை கிளப்பினார்கள்.

நிலைமை இப்படி இருக்க தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும் அடுத்தடுத்து இரண்டு மீட்டிங்குகள் நடந்தது.

புயலை கிளப்பிய அந்த போஸ்டர்.. பதிலுக்கு அதிரடி உரை.. ஒரே நாளில் அதிமுகவில் 2 சம்பவம்.. என்ன நடந்தது?புயலை கிளப்பிய அந்த போஸ்டர்.. பதிலுக்கு அதிரடி உரை.. ஒரே நாளில் அதிமுகவில் 2 சம்பவம்.. என்ன நடந்தது?

மீட்டிங் எப்படி

மீட்டிங் எப்படி

ஓபிஎஸ் வீட்டில் மொத்தம் 2 மணி நேரம் மீட்டிங் நடந்து இருக்கிறது. மொத்தம் 17 பேர் ஓ.பி.எஸ் உடன் நடந்த மீட்டிங்கில் முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதாவது மொத்தம் 14 அமைச்சர்கள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு உள்ளனர் . தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ ஆகிய முக்கியமான அமைச்சர்கள் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு உள்ளனர்.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

அதேபோல் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இரண்டு பேரும் மீட்டிங்கில் முன்னிலை வகித்துள்ளனர். துணை முதல்வர் ஓ.பி. எஸ்ஸையும் சேர்த்து மொத்தம் 17 பேர் இந்த ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளனர். இவர்கள் எல்லோரும் போஸ்டர் பிரச்சனை குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் ஆலோசனை செய்துள்ளனர்.

என்ன முக்கியம்

என்ன முக்கியம்

இதில் கலந்து கொண்ட அமைச்சர்கள், இப்போது ஒற்றுமையாக அறிக்கை வெளியிடுவதுதான் சிறந்தது. தேர்தலுக்கு 8 மாதம் இருக்கிறது. இப்போது முரண்பாடுகளை கொண்டு இருப்பது சரியாக இருக்காது. முரணப்பாடுகளை களைந்துவிட்டு எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். தேர்தலுக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்று கூறியுள்ளனர்.

பேசுங்கள்

பேசுங்கள்

அதோடு சில மூத்த அமைச்சர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் நேரடியாக பேச வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போது சண்டையில் ஈடுபாட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறும். எதை பற்றியும் இப்போது கருத்து தெரிவிக்க வேண்டாம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவுகளை எடுத்துக் கொள்வோம். அதுவரை கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம், என்று கூறியுள்ளனர்.

எதிர்ப்பு இல்லை

எதிர்ப்பு இல்லை

இதற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிறார்கள். அமைச்சர்கள் சிலர் தெரிவித்த கருத்துதான் சர்ச்சைக்கு காரணம். வேறு பிரச்சனை இல்லை. சிலர் கொடுத்த பேட்டிகள் சர்ச்சைக்கு காரணமாகிவிட்டது. கூட்டாக அறிக்கை வெளியிட தயார். அதிமுகவில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை களைய தயார் என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ் குறிப்பிட்டார் என்று கூறுகிறார்கள்.

அறிக்கை வந்தது

அறிக்கை வந்தது

இதன்பின்பே அதிமுக சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக சார்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதிமுகவில் எந்த மோதலும் இல்லை. சின்ன விவாதம் நடந்தது என்பது போலவும், தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டு விதமாகவும் இந்த அறிக்கை அமைந்து இருந்தது. அதோடு தேவையில்லாமல் யாரும் தொலைக்காட்சிகளில் தவறான கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்றும் கூட்டு அறிக்கையில் கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.

English summary
What did O Paneerselvam tell in the AIADMK party ministers meeting today in his residence?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X