சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதுமட்டும் "சீக்ரெட்டாம்".. மத்தியஸ்தம் பேசிய பாஜக.. எடப்பாடி, ஓபிஎஸ் முடிவு என்ன தெரியுமா?

அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்து உள்ளார். எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி , ஓ பன்னீர்செல்வத்திடம் பாஜக பேசி இருக்கிறது. இதற்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு சொன்ன பதில் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொருபக்கம் ஓ பன்னீர்செல்வம் சார்பாகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது. இதையடுத்தே அண்ணாமலை நேற்று டெல்லியில் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார்.

யார் இந்த கே.எஸ்.தென்னரசு? அதிமுகவில் கடந்து வந்த பாதை என்ன? எடப்பாடி டிக் செய்தது எப்படி?யார் இந்த கே.எஸ்.தென்னரசு? அதிமுகவில் கடந்து வந்த பாதை என்ன? எடப்பாடி டிக் செய்தது எப்படி?

 ஆலோசனை

ஆலோசனை

ஜே பி நட்டாவுடன் அண்ணாமலை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கில் என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரில் யாரை ஆதரிக்கலாம், தனித்து நிற்கலாமா, தேர்தலை தவிர்க்கலாமா என்று ஆலோசனை செய்துள்ளனர். அதிமுகவில் சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரண்டு தரப்பும் வேட்பாளரை களமிறக்கி உள்ளது. இதனால் இரண்டு வேட்பாளருக்கும் பி பார்மில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து போட மாட்டார்கள். எனவே இரண்டு தரப்பிற்கும் சின்னம் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் இரண்டு தரப்பிற்கும் பொதுவான சின்னம் தனி தனியாக வழங்கப்படலாம். இதை பற்றியும் அண்ணாமலை டெல்லியில் ஆலோசனை செய்துள்ளார்.

 சந்திப்பு

சந்திப்பு

இதையடுத்தே அண்ணாமலை இன்று எடப்பாடியை மற்றும் ஓ பன்னீர்செல்வத்தை சென்று சந்தித்து உள்ளார். எடப்பாடி - ஓபிஎஸ் ஒன்று சேர வேண்டும் என்று இருவரிடமும் பாஜக தரப்பு கேட்டு இருக்கிறது. இருவரும் ஒன்றாக இருந்தால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று இந்த சந்திப்பில் பேசி உள்ளனர். இருவரையும் சந்தித்த அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில், பிப்ரவரி 7ம் தேதி வரை பொறுமையாக இருங்கள். எதிர்க்கட்சியாக தனி தனியாக நிற்காமல் ஒன்றாக நில்லுங்கள் என்று சொல்லி இருக்கிறோம். அதுதான் பாஜகவின் விருப்பம். டெல்லியின் விருப்பம் அதுதான். எதிர்க்கட்சியாக நாம் ஒன்று இணைய வேண்டும் என்று கூறி உள்ளோம் என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சீக்ரெட்

சீக்ரெட்

இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் இந்த சமரச பேச்சை எடப்பாடி ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது ஓ பன்னீர்செல்வம் இறங்கி வர சம்மதிப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இன்று ஓபிஎஸ், எடப்பாடியுடன் அண்ணாமலை நடத்திய சந்திப்பில் ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் ஒன்று சேர மறுத்தனரா என்ற கேள்வி செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது.

பதில்

பதில்

அதற்கு பதில் சொன்ன பாஜக சிடி ரவி.. இருவரும் என்ன பதில் சொன்னார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களுடன் பேசிய ரகசியங்களை இங்கே பகிர முடியாது என்று தெரிவித்தனர். அதாவது ஓபிஎஸ், எடப்பாடி இருவரும் ஒன்று சேர மறுத்தனரா என்ற விஷயம் மட்டும் சீக்ரெட் என்று பாஜகவினர் சொல்லி உள்ளனர். பாஜகவின் சமரச பேச்சுக்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு சொன்ன பதில் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
What did O Panneerselvam and Edappadi Palanisamy say to Annamalai about joining together?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X