இமேஜ் முக்கியமில்ல! ரஜினி தந்த அட்வைஸ்.. கடைசி வரை கஷ்டப்பட்ட ஐஸ்வர்யா.. தனுஷுக்கு இது பெரிய ரிஸ்க்
சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து கோலிவுட் தரப்பில் சிலரிடம் விசாரித்ததில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் கிடைத்தன.
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இவர்களின் 18 வருட திருமணம் முடிவிற்கு வந்துள்ளது. நேற்று சமூக வலைதளங்களில் இது தொடர்பான அறிவிப்பை தனுஷ் வெளியிட்டார்.
இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து திரை உலகில் ரஜினி தரப்பிற்கு நெருக்கமாக இருக்கும் சிலரிடம் விசாரித்தோம். இந்த முடிவு காரணமாக ரஜினி மட்டுமின்றி சில டாப் பிரபலங்கள் அப்செட்டில் இருப்பதாக நம்மிடம் தெரிவித்தனர்.

ரஜினி தந்த அட்வைஸ்
அதன்படி.. ரஜினிகாந்தின் இன்னொரு மக்கள் சவுந்தர்யா ஏற்கனவே டைவர்ஸ் ஆனவர். அதன்பின் இப்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். உண்மை என்னவென்றால் அப்போதே தனுஷ் - ஐஸ்வர்யா பிரியும் நிலையில் இருந்தனர் என்று சினிமா வட்டாரத்தில் நம்மிடம் தெரிவித்தனர். ஆனால் ரஜினிதான்.. உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.. அவசர பட வேண்டாம். யோசித்து முடிவு செய்யுங்கள் என்று அட்வைஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இமேஜ் முக்கியமில்லை
அதாவது சவுந்தர்யா விவாகரத்து செய்த போதே ரஜினி ஐஸ்வர்யாவிற்கும் இது தொடர்பாக அறிவுரை வழங்கி இருக்கிறாராம்.. நீங்கள் பிரிந்தால் என் இமேஜ் பாதிக்கும் என்று நினைக்க மாட்டேன். இமேஜ் எனக்கு முக்கியம் இல்லை. அதே சமயம் உன்னுடைய குழந்தைகளையும் நினைத்து பார் என்று முன்பே ரஜினி ஐஸ்வர்யாவிற்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இந்த அறிவுரை வழங்கப்பட்டது 2016ல்.

பொறுத்து போன ஐஸ்வர்யா
அப்போது தனுஷுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையில் சிறிய சிறிய மனஸ்தாபம் இருந்தாலும் ஐஸ்வர்யா அனைத்தும் பொறுத்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 5 வருடமாக ஐஸ்வர்யா பல முக்கியமான விஷயங்களை பொறுத்துக்கொண்டார் என்கிறார்கள். முக்கியமாக தனுஷ் பற்றி வந்த கிசுகிசுக்களை வேண்டுமென்றே தவிர்த்தார் என்கிறார்கள். அப்பா சொன்ன ஒரே வார்த்தைக்காக ஐஸ்வர்யா கடைசி வரை பொறுத்து போனதாக கூறப்படுகிறது.

பொறுக்க முடியவில்லை
ஆனால் சமீபத்தில் தனுஷ் செய்த சில விஷயங்கள் ஐஸ்வர்யாவை இந்த முடிவு எடுக்க தூண்டியதாக கூறப்படுகிறது. தனுஷின் சில நடவடிக்கைகளால் இருவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்பே தனுஷை பிரியும் கஷ்டமான முடிவை ஐஸ்வர்யா எடுத்தாராம். ரஜினி மனதை இது கஷ்டப்படுத்தும் என்றும் தெரிந்தும் கூட ஐஸ்வர்யா தனது குடும்பத்தினரிடம் பேசி.. கடைசியாக சமாளிக்க வைத்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

வேறு வேறு மாதிரி
இதையும் சமந்தா திருமணத்தையும் சிலர் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். அதுவும் பெரிய வீட்டில் நடந்த டைவர்ஸ்தான். ஆனால் சமந்தாவின் கெரியரை இது பாதிக்காது. சமந்தாவிற்கு அதற்கு பின்புதான் வாய்ப்பு அதிகரித்தது. ஆனால் தனுஷுக்கு இது பெரிய பிரச்சனை ஆகலாம். தனுஷுக்கு இது கெரியரில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று இன்டஸ்ட்ரி தரப்பில் கூறுகிறார்கள். ரஜினி ரசிகர்கள் பலர் தனுஷ் மீது கொதிப்பில் இருக்கிறார்கள். வயதான காலத்தில் ரஜினியை கஷ்டப்படுத்துகிறார்கள்.. தொடர் பிளாப்.. உடல்நிலை பிரச்சனை.. அரசியலில் ஏமாற்றம் என்று இருக்கும் ரஜினிக்கு குடும்பத்திலும் இப்படி பிரஷர் தருகிறார்கள்.
Recommended Video

ரஜினி ரசிகர்கள் குடும்பத்தினர் விரும்ப மாட்டார்கள்
தனுஷ் கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாம். அவர் பெரிய ரிஸ்க் எடுத்துவிட்டார் என்று ரஜினி ரசிகர்கள் கருதுவதாக இன்டஸ்ட்ரி தரப்பில் கூறுகிறார்கள். அவருக்கு குடும்ப ரசிகர்கள் இடையே அதிருப்தி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதோடு ரஜினிக்கு நெருக்கமான டாப் தயாரிப்பாளர்கள், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் தனுஷின் இந்த முடிவை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அவசரப்பட்டுவிட்டார் என்று இன்டஸ்ட்ரியில் டாப் தலைகள் சிலர் கருதுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications