சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சர்வாதிகாரி".. தயவுதாட்சண்யம் பார்க்க மாட்டேன்.. போதை பொருள் விற்றால் "சைபர் செல்".. ஸ்டாலின் அதிரடி

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஸ்டாலின் துவங்கி வைத்தார்

Google Oneindia Tamil News

சென்னை: போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில், தன் கடமையை செய்ய தயங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு எந்த விதத்திலும் தயவுதாட்சண்யமும், தயக்கமும் காட்டாது என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Operation Ganja 2.0 தமிழ்நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் - முதலமைச்சர்

    போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் துவங்கியது..

    இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று உரையாற்றினர்.

    செஸ் ஒலிம்பியாட்டில் கவனிச்சீங்களா.. ஸ்டாலின் குடும்ப ஆதிக்கம்தான் இருந்தது.. ஜெயக்குமார் ஆவேசம்! செஸ் ஒலிம்பியாட்டில் கவனிச்சீங்களா.. ஸ்டாலின் குடும்ப ஆதிக்கம்தான் இருந்தது.. ஜெயக்குமார் ஆவேசம்!

     கவலை அளிக்கிறது

    கவலை அளிக்கிறது

    விழாவில் பேசிய முதல்வர் பேசிய முழு உரை இதுதான்: "கவலை அளிக்க கூடிய மனநிலையில் இந்த நிகழ்ச்சியில் நின்று கொண்டு இருக்கிறேன். தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் எனக்கு கவலை அளிக்கிறது. அப்போது நடக்காத எந்த முயற்சியும் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

    சர்வாதிகாரி

    சர்வாதிகாரி

    ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் எனது காவல் எல்லைக்குள் போதை பொருள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு நீதி மன்றம் அமைக்க உள்ளோம் போதை பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு "சைபர் செல்" உருவாக்கப்பட உள்ளது.. இந்த விவகாரத்தில் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவேன் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தனது கடமையை செய்ய தயங்கும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும்.

    சங்கிலி

    சங்கிலி

    போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு எந்த விதத்திலும் தயக்கம் காட்டாது.. 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செல்லும் சங்கிலியை நாம் உடைக்க வேண்டும்.. போதை போன்ற சமூக நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமும் பாடுபட வேண்டும்.

    தூண்டுதல்

    தூண்டுதல்

    பெற்றோர்கள் பாதி ஆசிரியராகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாவும் இருந்தால் போதை பொருள் பாதிப்பிலிருந்து மாணவர்களை பாதுகாக்கலாம். மேற்கத்திய நாடுகளில் போதை பொருட்கள் பயன்பாடு குறைந்து, ஆசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. போதை தான் அனைத்து சமூக குற்றங்களுக்கும் தூண்டுதலாக உள்ளது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை போதை பொருட்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்க வேண்டும்" என்றார்.

    English summary
    what does cm stalin request in chennai kalaivanar arangam awarness function போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஸ்டாலின் துவங்கி வைத்தார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X