சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அந்த" ரூமில் என்ன நடந்தது.. உறுதி அளித்த அமித்ஷா.. பெருத்த நம்பிக்கையில் பாஜக... கிடைச்சுருமோ!!

பாஜக 50 சீட்டுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: நிஜமாகவே எல்.முருகன் சொன்னது நடந்துடும் போலயே.. 60 சீட் கேட்டிருந்தார்.. ஆனால், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான சீட்டையே அடிச்சி பிடுச்சி பாஜக வாங்கிடும் என்றே தெரிகிறது.

அமித்ஷா ஒரு நாள் வந்து போனாலும், அவரது வருகையின் தாக்கம் அதிகமாகி உள்ளது.. இன்னமும் அரசியல் களத்தில் பல தகவல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.. பல யூகங்கள் எழுந்தபடியே உள்ளன.. வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், இப்போதும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.. அதாவது 50 சீட்டை பாஜக பேசி முடித்து விட்டதாக கூறுகிறார்கள்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

ரஜினி, சசிகலா விவகாரங்களில் நினைத்தது நடக்கலை..கேட்ட தொகுதிகளாவது அதிமுக தருமா? பாஜக பரிதவிப்பு ரஜினி, சசிகலா விவகாரங்களில் நினைத்தது நடக்கலை..கேட்ட தொகுதிகளாவது அதிமுக தருமா? பாஜக பரிதவிப்பு

 குருமூர்த்தி

குருமூர்த்தி

அமித்ஷா அரசு விழாவில் பங்கேற்றது தவிர, வேறு எங்கியுமே வெளியில் போகவில்லை.. யாருடனும் அவர் பேசி நாம் பார்க்கவும் இல்லை.. லீலா பேலஸ்-க்குள் போனவர், அத்துடன் ஊருக்கு கிளம்பும்போதுதான் வெளியே வந்தார்.. அதேசமயம், முதல்வர், துணை முதல்வர் முதல் குருமூர்த்தி வரை சந்திப்பும் நடந்துள்ளது.

 ஜெயக்குமார்

ஜெயக்குமார்

இதில், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சென்றபோது, அவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றார்... ஓட்டலுக்கு சென்ற கொஞ்ச நேரத்தில் 3 பேரும் அமித்ஷா ரூமுக்குள் அழைக்கப்பட்டனர். ஆனால், என்ன ஆச்சோ தெரியவில்லை.. உள்ளே சென்ற வேகத்திலேயே வெளியே வந்துவிட்டார் ஜெயக்குமார். அதன்பிறகு ஈபிஎஸ் -ஓபிஎஸ் 2 பேருடன் 20 நிமிட ஆலோசனை நடந்துள்ளது.. இந்த தகவலை சில பத்திரிகைகளும் வெளியிட்டிருந்தன.

 உறுதி

உறுதி

ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.. பீகார் தேர்தலில் உங்களின் பங்களிப்பை போலவே தமிழக தேர்தலிலும் அளிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டதாகவும், அதற்கு அமித்ஷா ஈபிஎஸ் "கண்டிப்பா" என்று உறுதி தந்ததாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கிளம்பி செல்ல எழுந்து நின்ற ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவரையும் பார்த்து, "நீங்க ரெண்டு பேரும் இதுமாதிரியே எப்பவுமே ஒன்னா இருக்கணும்னு விரும்புறேன்" என்றும் அமித்ஷா சொன்னாராம்.

 உண்மையா?

உண்மையா?

இப்படிப்பட்ட தகவல்கள்தான் வெளிவந்ததே தவிர, சீட் பற்றின விவகாரம் வரவே இல்லை..இன்றுதான் 50 சீட்கள் பாஜக கேட்டதாக சில பத்திரிகைகள் யூகத்துடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.. இது உண்மையா? பாஜக வரலாற்றிலேயே இவ்வளவு சீட்டுகளை தமிழகத்தில் ஒதுக்கியதே இல்லையே.. அவர்களுக்குள் என்னதான் பேசி கொண்டனர்? என்ற சந்தேகங்கள் அதிமுக தரப்பில் எழுந்து வருகின்றன.

 நோ சான்ஸ்

நோ சான்ஸ்

இருந்தாலும், "50 சீட்டுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. வேண்டுமானால் 30 சீட் தரப்படும்.. அதற்குமேல் நோ சான்ஸ்.. எல்லாம் வதந்தி" என்கின்றனர் மற்றொரு தரப்பினர். எப்படியோ, அமித்ஷா டெல்லிக்கு போய் சேர்ந்து விட்டாலும், இன்னமும் அந்த வருகையின் தாக்கம் தமிழகத்திலேயே சுற்றி கொண்டிருப்பது மலைப்பாக இருக்கிறது!

English summary
What happened at the Amit Shah and AIADMK meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X