சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சித்ராவின் கடைசி நொடிகள்.. அந்த "மூன்று முடிச்சுக்கள்".. ஹேமந்த் சிக்கியது எப்படி.. பரபர தகவல்கள்

சித்ராவுடன் கடைசி வரை ஹேமந்த் தகராறில் ஈடுபட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கடைசி நாளில், கடைசி நேரத்திலும் சித்ரா துடித்த துடிப்பும், கதறி அழுத பரிதாபமும் அவரது ரசிகர்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

சித்ரா மரணம் தொடர்பான பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.. சித்ரா தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை என்று சொல்லப்படும் அளவுக்கு கெத்தாக வலம் வந்தவர்.. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருமே சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை என்று பிடிவாதமாக சொல்லி வந்தனர்.

இந்தநிலையில்தான், ஹேமந்த்தை 6 நாட்களாக போலீசார் விசாரித்து, அவரது வாக்குமூலங்களை பெற்றனர்.. ஹோட்டல் ரூமில் சம்பவத்தின்போது, ஹேமந்த் மட்டுமே இருந்ததாலும், விசாரணையின்போது ஹேமந்த் முன்னுக்கு பின் முரணான தகவல்களை சொன்னதாலும், வழக்கில் லேசான பின்னடைவு ஏற்பட்டது.

சுயரூபம்

சுயரூபம்

ஆனால், ஹேம்நாத்தின முகம் படபடப்புடனே இருந்த நிலையில், சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் செல்போன்களில் பதிவான தகவல்களை வைத்துதான் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், செல்போன் தகவல் மூலம் பல விஷயங்கள் அம்பலமாகி இருக்கின்றன. ஹேமந்த் பற்றி கேள்விப்பட்ட பல தகவல்களை சித்ராவிடம் சொல்லியும், கடைசிவரை ஹேமந்த்தை சித்ரா நம்பியதுதான் இதற்கெல்லாம் காரணம் என்றும் தெரிவந்துள்ளது. இவர்கள் ரிஜிஸ்தர் கல்யாணம் செய்த பிறகுதான், ஹேமந்தின் சுயரூபம் சித்ராவுக்கு தெரியவந்துள்ளது.

கடன்பிரச்சனை

கடன்பிரச்சனை

சித்ரா ராப்பகலாக சம்பாதித்த பணத்தை, ஹேமந்த் வாங்கி இஷ்டத்துக்கும் செலவு செய்துள்ளாராம்... இதைதவிர, சித்ரா என் மனைவிதான் என்று பலரிடம் கடன் வாங்கியும் உள்ளார். வீட்டுக்கடன், கார் கடன், கல்யாண செலவு என்று இத்தனை இருக்கும்போது, அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஹேமந்திடமே கேள்வி எழுப்பியும், சித்ராவுக்கு பதில் கிடைக்கவே இல்லை. கல்யாணத்தை அனைவரையும் கூட்டி நடத்த வேண்டும் என்ற சித்ராவின் விருப்பத்தையும் ஹேமந்த் கண்டுகொள்ளவும் இல்லையாம், ஒத்துழைப்பும் தரவில்லையாம்.

 தகராறு

தகராறு

இதுவரை சம்பாதித்த பணத்தை எல்லாம் அம்மாவிடம் தந்து நிர்வகித்து வந்த நிலையில், இனிமேல் ஹேமந்த்திடம் பணத்தை தருவதில் முதல் தகராறு எழுந்துள்ளது.. இந்த சமயத்தில்தான், நடிப்பு விஷயத்திலும் ஹேமந்த் தலையிட்டுள்ளார்.. அதாவது ஒரு சீரியலில் எந்த சீனில் எப்படி, யாருடன் நடிக்க வேண்டும் என்றுகூட ஹேமந்த் சொல்வது போலதான் நடிக்க வேண்டுமாம்.. தான் சொல்வது போல நடிக்காவிட்டால், அந்த சீரியலில் இருந்தே விலகுமாறும் தொந்தரவு செய்துள்ளார். நடிப்புதான் எல்லாமே என்று டெடிகேஷனுடன் வேலை பார்த்து வந்த சித்ராவுக்கு இது 2 வது சிக்கலாக அமைந்தது.

சிக்கல்கள்

சிக்கல்கள்

அடுத்ததாக, சித்ரா இயல்பாகவே அனைவரிடமும் சிரித்து பேசக்கூடியவர்.. ஆனால், இதற்கும் ஹேமந்த் தடை விதித்துள்ளார்.. யார் யாருடன் பேச வேண்டும் என்று ஹேமந்த் கட்டுப்படுத்தி உள்ளார்.. ஒருகட்டத்தில் சக நடிகர்களிடமும் சித்ரா பேச அனுமதி தரவில்லையாம்.. இப்படி 3 முடிச்சு சிக்கல்களில் தினம்தோறும் ஊழன்று தவித்து வந்துள்ளார் சித்ரா.

 குழப்பம்

குழப்பம்

இதற்கு பிறகுதான், ஹேமந்த் குணம் முழுசாக தெரிந்து கொண்டு, அம்மாவிடமும், நெருங்கிய நட்புக்களிடமும் சொல்லி அழுதுள்ளார்.. ஹேமந்த்தை பிரிந்துவிடலாம் என்றாலோ, சமீபத்தில்தான் நிச்சயதார்த்தம், ரிஜிஸ்தர் கல்யாணம், என்று அடுத்தடுத்து நடந்து முடிந்த நிலையில், உடனே ஹேமந்தை பிரிந்தால், தனக்கு கெட்ட பேர் கிடைத்துவிடுமே என்ற தவிப்பிற்கும் சென்றாராம்.

சண்டை

சண்டை

சம்பவத்தன்றுகூட, ஷூட்டிங் முடிந்து காரில் வரும்போதும், ரூமுக்குள் வந்தபிறகும் தொடர்ந்து தகராறு நடந்துள்ளது.. அப்போது ஹேமந்த் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.. ஒருகட்டத்தில் சண்டை முற்றி போய், தலையில் அடித்துக்கொண்டு சத்தம் போட்டு அழுதாராம் சித்ரா.. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாமல் அசால்ட்டாக ஹேமந்த் வெளியே வந்துள்ளதாக சொல்கிறார்கள்.

 மெசேஜ்கள்

மெசேஜ்கள்

பிறகு ரொம்ப நேரம் கழித்து ரூமுக்கு சென்றபோதுதான் கதவை தட்டி சித்ரா திறக்காமல் இருந்திருக்கிறார்.. அப்போதுகூட, "என்ன அழுது நடிக்கிறியா?" என்று கேட்டுக் கொண்டே கதவை ஓங்கி தட்டிஉள்ளார்.. அந்த சத்தம் கேட்டுதான் ஓட்டல் மேனேஜர் வந்துள்ளதாக தெரிகிறது.. ஆக மொத்தம் நடந்து முடிந்த 6 நாட்கள் விசாரணையில் ஹேமந்த் பெருமளவு சொன்னது பொய்கள்தானாம்.. போலீசார்தான், சித்ரா, ஹேமந்த் செல்போன்களை வைத்தும், அதில் இருந்த அழைப்புகள், மெசேஜ்களை வைத்தும் கண்டுபிடித்துள்ளனர்.

சண்டை

சண்டை

அதுமட்டுமல்ல, ரூமில் சண்டை நடந்தபோது சித்ரா அம்மாவிடம் வாக்குவாதம் செய்ததாக ஒரு தகவல் நாளைக்கு முன்பு கசிந்தது.. ஆனால், அது வாக்குவாதம் இல்லையாம்.. ஹேமந்துடன் தகராறு செய்யவும், அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார் சித்ரா.. அம்மாவும் சித்ராவுக்கு ஆறுதல் சொன்னாராம்.

ஹேமந்த்

ஹேமந்த்

ஹேமந்த் சொல்லாத பல விஷயங்களை நம் போலீசாரே கண்டுபிடித்து வெளிகொணர்ந்து உள்ளனர்.. இனி ஹேமத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, மேலும் பல விஷயங்களை வெளி உலகத்துக்கு கொண்டு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.. எப்படியோ, சுதந்திரமாக சுற்றி திரிந்த பறவை ஒன்று.. சிறகொடிந்து போய், கூண்டுக்கிளியாகி.. கடைசியில் பரிதாப மரணத்தை தழுவி பறந்தே விட்டது!

English summary
What happened in Chitra's Hotel Room on the last day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X