சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் தமிழருவியார்.. மறுபக்கம் ரஜினி ரசிகர்கள்.. கூட்டி கழிச்சு பார்த்தா சரியா வரலையே கண்ணா!!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு பக்கம் தமிழருவி மணியார் கூட்டம் நடத்துறாரு.. மறுபக்கம் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க... ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டாலும் தாமதமாகவே அறிக்கை வெளியிடுறாரு ரஜினி.. இது எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு சரியா வரலையே.. ஒரே குழப்பா இருக்கே!

Recommended Video

    சென்னை: கஷ்டப்படுத்தாதீங்க… அரசியலுக்கு வரவே மாட்டேன்: ரசிகர்களுக்காக… மீண்டும் அறிக்கை விட்ட ரஜினி!

    ரஜினி ரசிகர்கள் இதுவரை 44 ஆண்டுகளில் பார்க்காத ஒரு முகத்தை இன்று பார்த்துவிட்டார்கள். மிகவும் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். போராட்டம் நடத்தக் கூடாது என மக்கள் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டும் மாஜி நிர்வாகத்தினரின் தூண்டுதலால் இந்த போராட்டம் நடந்ததாக ரஜினி கூறுகிறார்.

    எல்லாம் சரி ஒரு சில விஷயங்கள் புரியவில்லை. ஜனவரி 10-ஆம் தேதி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் அறவழி போராட்டம் என எப்போதோ அறிவித்துவிட்டார்கள் (ரஜினி கண்டன அறிக்கை வெளியிட்டது போயஸ் கார்டனில் ரசிகர்கள் போராடியதற்கு..).

    தமிழருவி மணியனார்

    தமிழருவி மணியனார்

    ஆனாலும் இன்று விடுத்த காட்டமான அறிக்கையை முன் கூட்டியே அவர் வெளியிட்டிருந்தால் இது போல் ரசகிர்கள் போராடியதை தடுத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதே நேரத்தில் காந்திய மக்கள் இயக்கத்தினரை கொண்டு தமிழருவி மணியனார் கூட்டம் நடத்துகிறார்.

    ரஜினி எழுச்சி

    ரஜினி எழுச்சி

    இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் நேரத்தில் மணியனாரும் கூட்டம் நடத்தும் அளவுக்கு அரசியல் அவசரம் என்ன வந்தது? ஒரு வேளை இப்படியிருக்குமோ! வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழகமே கூடும் என எதிர்பார்த்து வாலை விட்டு தும்பை பிடித்தாரோ என்னவோ தெரியவில்லை. அதாவது ரஜினி எதிர்பார்த்த எழுச்சி நேற்று வரும் என எதிர்பார்த்திருக்கலாம்.

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    ஆனால் அது நடைபெறவில்லை. ரசிகர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையில் தமிழருவியாரும் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால்தான் ரஜினி மக்கள் மன்றத்துடன் காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்கிறார் என்ற தகவல் இரவு கசிந்தது.

    ரஜினி முடிவு

    ரஜினி முடிவு

    ஆனால் இன்று காலை தமிழருவியார் திடீர் பல்டி அடித்துள்ளார். அதே சமயம் ரஜினியும் தான் அரசியலுக்கு வர போவதில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக முடிவுரை எழுதிவிட்டார். ரஜினியின் இந்த முடிவு முன் கூட்டியே தமிழருவியாருக்கு தெரிந்திருக்கும் என்கிறார்கள். எது எப்படியோ எல்லாத்தையும் இணைத்து பார்த்தாலும் ஒரு விடையும் கிடைக்கவில்லை, ஒரே குழப்பமாகவே இருக்கிறது.

    English summary
    Why Rajinikanth reacted very late to Chennai Valluvar Kottam protest? Here are the some reasons.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X