"கவர்ச்சி" பூஜா.. சொக்கி போன மகேஷ்.. ஒரே நாளில் "எல்லாமே" முடிந்தது.. கடைசியில் ட்விஸ்ட்டை பாருங்க
சென்னை: முருகர் கோயிலில் பெண்ணை பார்த்ததுமே தமிழ்வாணனுக்கு பிடித்துவிட்டது.. உடனே பெண் பார்த்து, உடனே திருமணமும் செய்து, மூன்றாவது நாளிலேயே போலீசுக்கு ஓடினார் தமிழ்வாணன்..!
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்.. 32 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதால், நீண்ட காலமாகவே பெண் பார்த்து வந்துள்ளார்.
இவருக்கு புரோக்கர் மகேஷ் அறிமுகமாகி உள்ளார்.. இவர் சேலத்தை சேர்ந்தவர்.. தமிழ்வாணன் பெண் தேடுவதை அறிந்து, அவரை தொடர்பு கொண்டு பேசினார்.. தனக்கு தெரிந்த பெண் ஒருவர் விருதுநகரில் இருப்பதாக சொன்னார்..
கவர்ச்சியோ கவர்ச்சி.. அந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும், மஞ்சள் கலர் சேலையும்.. அல்லோகல்லப்படும் இணையம்

மகேஷ்
இதைக் கேட்டு ஆர்வமான தமிழ்வாணன், அந்த பெண்ணை உடனே பார்க்க முடிவு செய்தார்.. விருதுநகர் முருகர் கோயிலுக்கு பெண்ணை வரவழைத்து பார்க்கலாம் என்று புரோக்கரும் ஐடியா தந்தார்.. எனவே, தமிழ்வாணனின் அம்மா, அம்மா, அண்ணன், அண்ணி என குடும்பத்தில் உள்ள முக்கிய நபர்கள், சென்னை பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி விருதுநகர் முருகர் கோயிலுக்கு சென்றுள்ளனர். ஏப்ரல் 14-ம் தேதி அன்று பெண்ணை பார்க்க முடிவானது.. கோயிலுக்கு, புரோக்கர் மகேஷ், ஒரு பெண்ணை அழைத்து வந்தார்.. அவர் பெயர் கமலா என்று அறிமுகப்படுத்தினார்.. ஆனால், அவர் கல்யாண பெண் கிடையாது.. அவரும் அந்த ஊரில் உள்ள ஒரு புரோக்கராம்.. இந்த கமலா மூலமாகதான், சம்பந்தப்பட்ட கல்யாண பெண்ணையே மகேஷுக்கு தெரியுமாம்..

புரோக்கர்
பிறகு, 2 புரோக்கர்களும் சேர்ந்து, அடுத்த கொஞ்ச நேரத்தில், இன்னொரு பெண்ணை அழைத்து வந்தனர். அவர்தான் கல்யாண பெண்.. பெயர் பூஜா.. வயசு 36 ஆகிறதாம்.. அவருடன் அவரது அம்மா, அப்பா என குடும்பமே வந்திருந்தது.. பூஜா அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்ததால், தமிழ்வாணனுக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது.. பெண் பிடித்துள்ளதாக சொன்னதுமே, பெண்ணிடம் மாப்பிள்ளையை பிடித்துள்ளதா என்று 2 புரோக்கர்களும் கேட்டுள்ளனர்.. பூஜாவும், மாப்பிள்ளை பிடித்துள்ளது என்று சொல்லி உள்ளார்.. இதற்கு பிறகுதான், 2 புரோக்கர்களும், தமிழ்வாணனைவிட குஷியானார்கள்..

கல்யாணம்
புரோக்கர் பீஸ், 2 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.. அப்படி இப்படி என கடைசியாக 1.5 லட்சத்திற்கு பேரம் முடிந்துள்ளது... அங்கேயே கோயிலிலேயே தமிழ்வாணன் குடும்பத்தினர் வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை அங்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள 15 ஆயிரம் பணத்தை சென்னை சென்றதும் தருகிறோம் என்றனர்.. அதற்கு புரோக்கர்களும் ஓகே சொன்னார்கள்.. பிறகு, அன்றைய தினமே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று பூஜா குடும்பத்தினர் சொன்னார்கள்.. இதை கேட்டதும், தமிழ்வாணன் குடும்பத்தினர், இன்னைக்கேவோ? என்று கேட்டனர்.. நல்லநாள் என்பதால், இப்போதே முடித்து கொள்ளலாம் என்று புரோக்கர்களும் அவர்களை சம்மதிக்க வைத்தனர்..

முருகர் கோயில்
திடீரென ஒரே நாளில் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னதால், தமிழ்வாணன் குடும்பத்தினர், மணமக்களுக்கு பட்டு துணி எடுத்துள்ளனர். பிறகு அன்று மாலை 7 மணிக்கு, அதே விருதுநகர் முருகர் கோயிலில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது... உறவினர்கள் யாருமின்றி திடீரென திருமணம் நடைபெற்றதால் திருமணம் நடந்த கையோடு அங்கிருந்து தமிழ்வாணன் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார். மறுநாள், 15-ம் தேதி காலை உறவினர்களுக்கு பூஜாவை திருமணம் செய்து கொண்டதாக அறிமுகப்படுத்தியுள்ளார்..

எஸ்கலேட்டர்
பிறகு அன்றைய தினம் இரவே சென்னை பள்ளிகரணைக்கு வந்துள்ளார்... மறுநாள் அதாவது 16ம் தேதி, தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு சென்று ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான துணியை எடுத்து பூஜாவுக்கு தந்தார் தமிழ்வாணன்.. 17-ம்தேதி, புதுவீட்டில் சமைப்பதற்காக மளிகை பொருட்களை வாங்க, பள்ளிக்கரணையில் உள்ள பிரபல கடைக்கு சென்றுள்ளனர்... தம்பதிகள் இருவரும் தேவையானவற்றை வாங்கி கொண்டனர்.. பிறகு வீடு திரும்புவதற்கு நகரும் படிகட்டில் (எஸ்கலேட்டர்) தமிழ்வாணன் ஏறியுள்ளார்... ஆனால், எஸ்கலேட்டரில் ஏறுவது தனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லி, பூஜா படிக்கெட்டு வழியாக கீழே இறங்கி வருவதாக கூறி சென்றுள்ளார்.

படிக்கட்டில் பூஜா
தமிழ்வாணன் கீழே வந்துவிட்டார்.. படிக்கெட்டு வழியாக வருவதாக சொன்ன பூஜாவை காணோம்.. எங்கெங்கோ தேடினார் தமிழ்வாணன்.. பூஜா கிடைக்கவேயில்லை.. உடனே அவருக்கு போன் அடித்தார்.. அப்போது பூஜா, "நான் என் வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்று சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டதும், அதிர்ந்துபோன மகேஷ், "எதுக்காக, என்னிடம் சொல்லாமல் சென்றாய்? கல்யாணமான 3 நாட்களிலேயே இப்படி தனியே வீட்டிற்கு சென்றது நியாயமா? என்று கேட்டுள்ளார்.. ஆனால், பதில் இல்லை.. பூஜா போனை கட் செய்துவிட்டிருந்தார்.

பெட்ரூம்
இதுகுறித்து தமிழ்வாணன் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்... இதைக் கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், பெட்ரூமுக்குள் நுழைந்து பார்த்தனர்.. அப்போதுதான், 10 ஆயிரம் ரூபாய் பணமும், பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது. உடனே போலீசுக்கு ஓடினார்கள்.. கல்யாணமான 3 நாட்களில், 10 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தலைமறைவாக உள்ள பூஜாவை கண்டுபிடித்து, நகையை மீட்டு தர வேண்டும் என்று புகார் தந்தனர்..

கதறல்
ஆனால், புகாரை பார்த்த பள்ளிகரணை போலீசார், விருதுநகர் சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது.. நாங்கள் 50 கிலோ மீட்டர் தூரம் வரைதான் கண்டுபிடிப்போம் என்று சொல்லி அந்த புகாரை வாங்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. பிறகு, இதுகுறித்து விருதுநகரில் உள்ள சூளக்கரை போலீசில், பூஜா மீதும், அந்த 2 புரோக்கர்கள் மீதும் தமிழ்வாணன் புகார் அளித்துள்ளார்... புகாரை பெற்றதற்கான CSR மட்டுமே சூளக்கரை போலீசார் வழங்கியுள்ளனராம்.. இதுகுறித்து நியாயம் வேண்டும் என்று கதறி கொண்டிருக்கிறார் புதுமாப்பிள்ளை தமிழ்வாணன்!