"அபார்ஷன் கேஸ்".. வசமாக சிக்கிய மாஜி மணிகண்டன்.. நடிகை சாந்தினி வழக்கில் ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த வருடம் ஜுன் மாதம், நடிகை சாந்தினி முக்கிய பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை, அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது எழுப்பினார்.
கல்யாணம் செய்து கொள்வதாக தன்னை மணிகண்டன் ஏமாற்றிவிட்டார் என்றும், அவரை நம்பி 3 முறை அபார்ஷன் செய்ததாகவும், இந்த விஷயம் மணிகண்டன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும் என்றும் சாந்தினி போலீசில் புகார் தந்தார்..
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்.. ஹைகோர்ட் உத்தரவு.. அடுத்தது என்ன?

மணிகண்டன்
இது தொடர்பாக சில ஆதாரங்களையும் அப்போது அளித்திருந்தார். இந்த புகாரின்போரில் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு மகளிர் போலீசாரும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால் அதற்குள் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, மாஜி அமைச்சர் மணிகண்டன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.. போலீசார் தரப்பிலோ இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை
"எங்கள் விசாரணை இப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.. சாந்தினி மற்றும் அவருக்கு அபார்ஷன் செய்ததாக சொல்லப்படும் டாக்டர்களின் வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.. இதுதொடர்பாக முக்கிய சாட்சிகளை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது.. அதனால், ஜாமீன் தரக்கூடாது.. அப்படி மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்" என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மணிகண்டன்
எனினும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட மணிகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுவிட்டார்.. இந்நிலையில் நடிகை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் அளித்த புகார் தொடர்பான வழக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால் அந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

காலக்கெடு
மேலும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றத்திற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்கு எண்ணிடும் பணி இன்னும் முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது... இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை நடைமுறை முடிந்தவுடன், வழக்கு தானாகவே சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றார்.. அத்துடன் நடிகை தொடர்ந்த வழக்கையும் முடித்துவைத்து உத்தரவிட்டார்.