சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல் வரப் போகுதுன்னு சொன்னாங்களே.. என்னாச்சு..??

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை: புயல் வரப் போகுதுன்னு சொன்னாங்களே.. என்னாச்சு என்று தமிழ்நாடு வெதர்மேன் கேட்டுள்ளார். மக்களிடம் பீதியைக் கிளப்பக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் போட்டுள்ள பதிவு:

    இந்த மாத இறுதியில் சிலர் தமிழகத்தை புயல் தாக்கும் என்று கூறி வந்தனர். என்னாச்சு. தற்போது ஒரு குறைந்த காற்றழுத்தம் கூட இல்லை. சும்மா பயத்தை கிளப்பக் கூடாது. தேவையில்லாத புயல் பீதி தகவல்களால் மக்கள் பயத்தில் வாழ்கின்றனர்.

    7 புயல் வராது

    7 புயல் வராது

    நிச்சயம் சிலர் கணித்துள்ளபடி 7 குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகாது. அப்படியெல்லாம் யாரும் பயப்பட வேண்டாம். தமிழகத்திற்கு டிசம்பரில் நிச்சயம் மழை இருக்கும். ஒட்டுமொத்த தமிழகமும் இந்த வருட இறுதிக்குள் இயல்பான மழை அளவை எட்டி விடும்.

    சென்னை மழை கம்மிதான்

    சென்னை மழை கம்மிதான்

    அதேசமயம், சென்னையைப் பொறுத்தவரை இயல்பு நிலையை எட்டுவது கடினம்தான். டிசம்பர் மத்தியில் பெய்யும் மழையைப் பொருத்துதான் அதை சொல்ல முடியும்.

    ஏதாவது கிடைக்குமான்னு பார்ப்போம்

    ஏதாவது கிடைக்குமான்னு பார்ப்போம்

    டிசம்பர் 4-5 தேதிகளில் அடுத்த கட்ட மழை பெய்யலாம். அப்போது சென்னைக்கும் கொஞ்சம் கிடைக்கும். ஆனாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கெல்லாம் இருக்காது. "மேடன் ஜூலியன் ஆசில்லேஷன்" (MJO) எனப்படும் தட்பவெப்ப மாற்றத்திற்காக காத்திருக்கிறோம். அது டிசம்பர் 2, 3வது வாரத்தில் ஏற்படலாம். இருப்பினும் நான் முன்பே கூறியபடி டிசம்பரில் சென்னைக்குப் பெரிய அளவில் மழையை எதிர்பார்க்க முடியாது.

    கேரளாவுக்கு இன்று இரவு மழை

    கேரளாவுக்கு இன்று இரவு மழை

    இன்று இரவு ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் வெதர்மேன்.

    English summary
    Tamil Nadu weatherman has said that there will be no Cyclone this season and asked the people to be relaxed and enjoy the rains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X