சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாற்றம் முன்னேற்றம்.. மல்லாக்க விழுந்த பாமக.. வாய்ப்பு கேட்டார் அன்று.. சீட் கேட்டு நின்றார் இன்று!

Google Oneindia Tamil News

Recommended Video

    அவ்வளவு கடுமையாக விமர்சித்துவிட்டு மீண்டும் அதிமுகவிடமே சரணடைந்த ராமதாஸ்- வீடியோ

    சென்னை: தமிழகத்தின் முதல்வராக எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட அன்புமணி இன்று ஒரு மாநிலங்களவை சீட்டு கேட்டு அதிமுக- பாஜக முன் நின்றிருக்கிறார் என்பதை பார்க்கும் போது பாமகவினர் சற்று அதிர்ச்சி அடைந்தார்.

    பாமக என்றால் சீட்டுக்காக எந்த எல்லைக்கும் போவர் என்ற பேச்சு பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில் அதிமுக, திமுகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்த போதிலும் ஏதாவது ஒரு காரணத்துக்காக அந்த கூட்டணி உடைந்து பின்னர் அவர்களை பாமக ஏதுவதே வேலையாக இருக்கும்.

    இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு பின்னர் அன்புமணிக்கு முதல்வராகும் ஆசை துளிர் விடவே அவர் மாற்றம் முன்னேற்றம் என்ற ஒரு திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். அது போல் ஆண்டுதோறும் தமிழக அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னர் இந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இதை புதிதாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சுழல் நிதி அறிக்கை என்ற ஒன்றை பாமக ஆண்டுதோறும் வெளியிட்டு வருவது பாமக மட்டும்.

    கேள்வி

    கேள்வி

    அவ்வப்போது பாமக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் மாற்றம் முன்னேற்றம் குறித்து பேசப்படும். அப்போதெல்லாம் பொது மக்கள் முன்பு பேசும் அன்புமணி பெரும்பாலும் கேள்விகளை கேட்டு பதில்களை பொதுமக்களிடம் இருந்து பெறுவார். இதில் பெரும்பாலும் மத்திய- மாநில அரசுகளை தாக்கி கேட்கும் கேள்விகளாகவே இருக்கும்.

    சமூக நீதி மாநாடு

    சமூக நீதி மாநாடு

    கடந்த 2017-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் பாமக சமூக நீதி மாநாட்டை நடத்தியது. 1987-ல் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர். இதன் விளைவாக 108 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. இந்த 21 இடஒதுக்கீட்டு தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு சமூக நீதி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

    திராவிடக் கட்சிகள்

    திராவிடக் கட்சிகள்

    இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி காட்டுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்குதான். திராவிடக் கட்சிகள் மக்களை சாராயத்துக்கு அடிமையாக்கிவிட்டன.

    விவாதிக்கத் தயாரா

    விவாதிக்கத் தயாரா

    இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கிவிட்டன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை தருவோம். வேலையின்மையை ஒழிப்போம் என்றெல்லாம் முழங்கினார். இதையடுத்து கல்வித் துறை விவகாரத்தில் அமைச்சர் செங்கோட்டையனுடன் நேருக்கு விவாதிக்க தயாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.

    எம்பி சீட்

    எம்பி சீட்

    இப்படி இருந்த அன்புமணி, திடீரென தான் விமர்சனம் செய்த அதிமுக, பாஜகவுடன் 7 தொகுதிகளை கேட்டு பெற்றதோடு தங்கள் பாதுகாப்புக்காக ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டு பெற்றுள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அன்று முதல்வராக வாய்ப்பு கேட்டார். இன்றோ ஒரு எம்பி சீட்டுக்கு கேட்டு நிற்கிறார்.

    English summary
    What happened to the Manthra of PMK's Change and Development? Anbumani wants to become the CM of TN. Then how can they go for alliance?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X